பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவனம்

பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவனம் என்பது 1999ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இது காஜாமலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு தெற்கு வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. கல்விக் கட்டடங்கள் தவிர இங்கு உள்விளையாட்டு அரங்கமும் விடுதிக் கட்டடங்களும் உள்ளன.

இது ஆரம்பத்தில் நான்கு தொழில்நுட்பப் பிரிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. அவை உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், பாறைவேதிப்பொருள் தொழில்நுட்பம் மற்றும், மருந்து இயற்பியல் மற்றும் தொழில்நுட்பம். 2005ஆம் ஆண்டு முதல் இக்கல்வி நிறுவனம் தன்னாட்சியுடன் செயல்பட ஆரம்பித்தது. இக்கல்வி நிறுவனம் 2007ஆம் ஆண்டு திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தற்போது திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமாக உள்ளது.[1][2][3]

உசாத்துணை

தொகு
  1. Alumni பரணிடப்பட்டது 12 ஏப்பிரல் 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. "School of Engineering and Technology". Archived from the original on 25 March 2017. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.
  3. Anna University Trichy பரணிடப்பட்டது 22 சூலை 2010 at the வந்தவழி இயந்திரம்