பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வுமையம், புதுச்சேரி
பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வுமையம் என்பது என்பது இந்தியாவின் புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் பாரதிதாசன் ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்த இல்லமாகும்.
வரலாறு
தொகு1900 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீட்டில் பாரதிதாசன் 1945 இல் குடியேறினார் அதிலிருந்து 1964 வரை இங்கு வாழ்ந்தார்.
நினைவு இல்லமாக
தொகுபாரதிதாசன் வாழ்ந்த இந்த இல்லம் 1971 இல் அரசுடைமையாக்கப்பட்டு, அருங்காட்சியமாக மாற்றப்பட்டது. 1977 இல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில் பாரதிதாசன் நினைவு நூலகம் காட்சிக்கூடம் ஆகியவற்றை ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி அமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு, 1978 இல் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. 1984 ஏப்ரலில் இந்நினைவு நூலகம் காட்சிக் கூடமானது. பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வு மையம் என பெயருடன் இயங்கத் தொடங்கியது.
வீட்டில் நுழைந்தவுடன் சுவற்றில் வரிசையாய் ஒளிப்படங்களும் பாவேந்தரின் சிலையும் உள்ளது. அதில் இலக்கியம், அரசியல், பத்திரிக்கை, திரைத்துறை, மொழி, இனம் தொடர்பான பாரதிதாசன் ஆற்றிய பணிகளை படங்களாக காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் பாவேந்தர் தான் கைப்பட எழுதிய கவிதைகள், கலை, இலக்கிய நண்பர்களுக்கு எழுதிய மடல்கள், ஆசிரியராக இருந்தபோது எழுதப்பட்ட பாடத்தயாரிப்புகள், பெரியார், கருணாநிதி ஆகியோரால் எழுதப்பட்ட மடல்களையும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பாவேந்தர் இதழாசிரியராக பொறுப்பேற்று நடத்திய இதழ்களின் படிகளையும் அவர் எழுதிய நூல்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும், பாரதிதாசன் பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி, சால்வை, அவர் அமரும் நாற்காலி மற்றும் கட்டில் வரை அனைத்தும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ செ.ஞானபிரகாஷ் (10 ஏப்ரல் 2018). "பாவேந்தர் வீடு பார்க்கலாம் வாங்க..!". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)