பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி
பாரதி வித்யாலயா என்னும் பள்ளியானது சேலம் மாவட்டம், மரவனேரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியாகும்.[1] இப்பள்ளியானது 1946ஆம் ஆண்டு 32 மாணவர்களுடன் நடுநிலைப் பள்ளியாக துவக்கப்பட்டது. இது 1978ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. 2018 ஆண்டு காலகட்டத்தில் இப்பள்ளியில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் மிகப் பெரிய நூலகம், பெரிய அரங்கம், பல்நோக்கு ஆய்வகம், பரந்த ஆடுகளம் போன்றவை உள்ளன. இந்தப்பள்ளியில் மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமாக தமிழ் இலக்கிய மன்றம், நாட்டு நலப்பணி திட்டம், இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், தேசிய பசுமைப் படை, சாலை பாதுகாப்புக் குழு, போன்றவை செயல்பட்டு வருகின்றன.
பாரதி வித்யாலயா | |
---|---|
முகவரி | |
மரவனேரி சேலம் மாவட்டம், தமிழ் நாடு இந்தியா | |
தகவல் | |
நிறுவல் | 1946 |
கற்பித்தல் மொழி | தமிழ், ஆங்கிலம் |
சான்றுகள்
தொகு- ↑ "பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி". செய்தி. தினமணி. 5 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)