பாராஃபின் மெழுகு
பாராஃபின் மெழுகு (Paraffin wax) என்பது ஒரு மிருதுவான நிறமற்ற திடப்பொருள் ஆகும். பெட்ரோல், நிலக்கரி, ஷேல் எண்ணெய் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இது 20 முதல் 40 கார்பன் கொண்ட ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளால் ஆன கலவை ஆகும். அறை வெப்ப நிலையில் திடப்பொருளாக உள்ளது. 37° செல்சியசுக்கு மேலாக உருகத் தொடங்குகிறது.[1] இதன் கொதிநிலைப் புள்ளி 370° செல்சியசுக்கும் மேலாக உள்ளது.[2] இம்மெழுகு உராய்வுகள் தடுப்பு, மின் கடத்தாமை, மெழுகுவர்த்தி,கிரையான், போன்றவற்றிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மண்ணெண்ணெய் மற்றும் சில பெட்ரோலியப் பொருட்கள் பாராஃபின் என்று அழைக்கப்பட்டாலும் இவை அதிலிருந்து வேறுபடுகிறது. சாயம் பூசாத மணமூட்டப்படாத பாராஃபின் மெழுகுவர்த்திகள் நிறமற்று அல்லது நீல வெள்ளை நிறமாக உள்ளது.
வரலாறு
தொகுபாராஃபின் மெழுகு 1830-ம் ஆண்டு ஜெர்மன் வேதியியல் நிபுணர் கார்ல் வான் ரேய்ச்சன்பேக்கால் உருவாக்கப்பட்டது. பிற மெழுகுவர்த்திகளை விடத் தயாரிப்பதற்கு மிக மலிவாக இருப்பதாலும் மாசின்றி எரிவதாலும் மெழுகுவர்த்தி உற்பத்தியில் பாராஃபின் மெழுகு ஒரு பெரும் புரட்சி செய்தது. பாராஃபின் மெழுகு குறைந்த உருகு நிலைப்புள்ளி கொண்டிருந்தாலும் பின்னாளில் ஸ்டீரிக் அமிலம் சேர்ப்பதன் மூலம் இந்தக் குறை நீக்கப்பட்டது.
பண்புகள்
தொகுபாராஃபின் மெழுகு பொதுவாக வெள்ளை நிறத்தில் நிறமற்று சுவையற்று திடமான மெழுகாக உள்ளது. அதன் உருகுநிலை 46 °C லிருந்து 68 °C க்குள் உள்ளது. அடர்த்தி 900 kg/m3. நீரில் கரைவதில்லை. ஈத்தர், பென்ஜீன், சில எஸ்டர்களில் கரைகிறது. இவை சிறந்த மின் கடத்தாப் பொருளாகவும் உள்ளது. இதன் எதிர்ப்பு திறன் 10ன் அடுக்கு 13 லிருந்து 10ன் அடுக்கு 17 ஓம் மீட்டர் வரை உள்ளது. வெப்பத்தைச் சேமித்து வைக்க இம்மெழுகு சிறந்த சாதனம். இவை திரவமாகவும் திடப்பொருளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பயன்பாடுகள்
தொகுமெழுகுவர்த்தி தயாரிப்பு
காகிதம் மற்றும் துணிகளில் மெழுகுப் பூச்சு
சில இனிப்பு வகை உணவுகளில் மெழுகுப் பூச்சு.இவை செரிமானத்தின் போது உடையாமல் அப்படியே உடலில் இருந்து வெளியேறுகிறது.
குவளை, பாட்டில், கேன் போன்றவற்றில் அடைப்பானாகப் பயன்படுகிறது.
உரங்கள் கட்டி ஆகாமலும் தூசு படியாமலும் ஈரம் ஆகாமலும் இருக்க இவை பயன்படுத்தப்படுகிறது.
வரையும் கிரையான்கள்.
ஹைப்ரிட் ராக்கெட்டில் திடப்பொருள் உந்திகளாக பயன்படுகிறது.
சருக்குப் பலகையில் உராய்வைத் தடுக்கப் பயன்பண்படுகிறது.
வேசிலின் போன்ற அழகுசாதனப் பொருள் தயாரிப்பில் பயன்படுகிறது.
நியூட்ரான் கதிர்வீச்சைத் தடுத்தல்.
மருத்துவக் குணங்களினால் மெழுகுக் குளியலுக்கு பயன்படுகிறது.
தொழில்சார் பாதுகாப்பு
தொகுசுவாசம், தோல், கண் போன்றவற்றின் மூலமாக இவை மனிதர்களைச் சென்றடைகிறது. தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் எட்டு மணி நேர வேலை நேரத்தில் 2mg/m3 அளவிற்கு இதன் வெளிப்பாடு இருக்கலாம் என அளவு நிர்ணயித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Freund, Mihály; Mózes, Gyula (1982). Paraffin products: properties, technologies, applications. Translated by Jakab, E. Amsterdam, Netherlands: Elsevier. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-99712-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Paraffin Wax". Chemical book. பார்க்கப்பட்ட நாள் 25 October 2013.