பாராசித்தமோல்

பாராசித்தமோல் (Paracetamol) அல்லது அசட்டாமினோபென் (acetaminophen) பொதுவான, வலிநீக்கி மற்றும் காய்ச்சலடக்கி மருந்து ஆகும். இது காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய வலிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தீவிரமான வலிகளை அடக்குவதிலும், வேறு மருந்துகளுடன் பாராரசித்தமோல் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பக்கவிளைவுகளைக் கொடுக்கக்கூடிய மற்ற மருந்துகளின் அளவைக் குறைத்துப் பயன்படுத்த முடிகிறது. பல்வேறு தடிமன், இன்புளுவென்சா மருந்துகளில் முக்கியமான கூறாக இது இருப்பதுடன், மருத்துவர்களின், ஆலோசனை தேவைப்படும் பல்வேறு வலிநீக்கி மருந்துகளிலும் இது சேர்க்கப்படுகின்றது. பொதுவாக, அளவாகப் பயன்படுத்தும்போது இது மனிதர்களுக்குப் பாதுகாப்பானது எனினும், தாராளமாகக் கிடைப்பதன் காரணமாக, வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ இதனை அளவுமீறி உட்கொள்ளும் சம்பவங்களும் பரவலாகக் காணப்படுகின்றன.

பாராசித்தமோல், பல வணிகப் பெயர்களில் உற்பத்தி செய்து விற்கப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது சந்தைப்படுத்தப்படுகின்றது. பிரேசில், கனடா, தென்கொரியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பவற்றில் இது, தைலெனோல் (Tylenol) என்ற பெயரிலும், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் பாராலென் (Paralen) என்ற பெயரிலும், தாய்வான், ஆஸ்திரேலியா, கிரீஸ், மத்திய அமெரிக்கா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், மலேசியா, ஹொங்கொங், ஐக்கிய இராச்சியம், இலங்கை, ருமேனியா, போர்த்துக்கல், நெதர்லாந்து, பின்லாந்து, சிங்கப்பூர், கெனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் பனடோல் (Panadol) என்ற பெயரிலும், இந்தியாவில் குரோசீன் என்ற பெயரிலும் விற்பனைக்கு உள்ளன.

நஞ்சு முறிவு

தொகு

பாராசித்தமோல் நஞ்சுக்கு முறிவாக N- அசிடைல் சிஸ்டைன் பயன்படுகிறது.

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paracetamol
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராசித்தமோல்&oldid=3268944" இலிருந்து மீள்விக்கப்பட்டது