பார்க் சுங்-கீ
பார்க் சுங்-கீ (ஆங்கிலம்:Park Chung-hee) 1917 நவம்பர் 14 - 1979 அக்டோபர் 26) என்பவர் தென் கொரிய அரசியல்வாதி ஆவார். அவர் 1963 முதல் 1979 இல் அவர் படுகொலை செய்யப்படும்வரை தென் கொரியா அதிபராக இருந்தவர். இராணுவப் புரட்சி மூலம் நாட்டின் தலைவராக உருவெடுத்தார். இவர் அதிபர் பதவிக்கு முன்னர், தென் கொரிய இராணுவத்தில் இராணுவத் தலைவராக பணியாற்றிய பின்னர் 1961 முதல் 1963 வரை தேசிய புனரமைப்புக்கான உச்ச சபையின் தலைவராக இருந்தார்.
தென் கொரியாவை வளர்ந்த நாடுகளுக்குள் கொண்டுவர முயன்ற பார்க், தொடர்ச்சியான பொருளாதாரக் கொள்கைகளில் தீவரம் காட்டியதின் விளைவாக விரைவான பொருளாதார வளர்ச்சியையும் தொழில்மயமாக்கலையும் தேசத்திற்கு கொண்டு வந்தது, அது இறுதியில் ஆன் ஆற்றின் அதிசயம் என்று அறியப்பட்டது. இதன் விளைவாக 60 மற்றும் 70 களில் தென் கொரியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக மாறியது.
பார்க் இறந்த பின்னரும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தது, இறுதியில் நாடு சனநாயகப்படுத்தப்பட்டது. நவீன தென் கொரிய அரசியல் உரையாடலிலும், பொதுவாக தென்கொரிய மக்களிடையே அவரது சர்வாதிகாரம் மற்றும் ஜனநாயக விரோத வழிகளிலும் பார்க் ஒரு சர்ச்சைக்குரிய நபராக உள்ளார். தென் கொரியாவை மறுவடிவமைத்து நவீனமயமாக்கிய ஆன் நதியில் அதிசயத்தைத் தக்கவைத்ததற்காக சிலர் அவருக்கு பெருமை சேர்த்தாலும், நாட்டை ஆளும் மற்றவர்கள் அவரது சர்வாதிகார வழியை விமர்சிக்கின்றனர் (குறிப்பாக 1971 க்குப் பிறகு).
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுபார்க் சப்பானிய ஆட்சியின் கீழிருந்த கொரியாவின் வடக்கு கியோங்சாங்கின் குமி என்ற ஊரில் 1917 நவம்பர் 14 இல் இவரது பெற்றோர்களான பார்க் சுங்-பின் மற்றும் பெக் நாம்-இயூய் ஆகியோருக்கு பிறந்தார்.[1] இவருக்கு ஐந்து சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு.[2]
அவர் தேகுவில் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு முங்கியோங்-இயூப்பில் ஆசிரியராகப் பணியாற்றினார், ஆனால் அவர் மிகவும் சாதாரணமான மாணவர் என்று கூறப்படுகிறது.[1] இரண்டாம் சீன-சப்பானியப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, சாங்சுன் ராணுவ அகாதமியில் சேர்ந்தார். அவரது அவர் திறமையான அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டார்.
தொழில்
தொகு1944 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு, பார்க் ஒரு சப்பானிய மாநிலமான மஞ்சுகோவின் இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார், மேலும் இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டங்களில் ஒரு படைப்பிரிவு தளபதியின் உதவியாளராக பணியாற்றினார்.[3][4]
சொந்த வாழ்க்கை
தொகுபார்க் கிம் ஹோ-நாம் என்பவரை மணந்தார் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர், அவர் இயூக் யங்-சூவை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். 1974 இல் பார்க் மீதான படுகொலை முயற்சியில் யூக் கொல்லப்பட்டார்.
மரபுரிமை
தொகு1979 ஆம் ஆண்டு வரை தென் கொரியாவில் விரைவான பொருளாதார வளர்ச்சியின் ஒரு காலமான ஆன் ஆற்றின் அதிசயத்தை பார்க் வழிநடத்தினார். இருப்பினும், அவரது சர்வாதிகார ஆட்சி ஏராளமான மனித உரிமை மீறல்களைக் கண்டது.[5][6]
பார்க் ஆட்சியின் போது தங்கள் இளமைப் பருவத்தை கழித்த பழைய தலைமுறையினர் நாட்டின் பொருளாதார அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்கும், வட கொரியாவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும், கொரியாவை பொருளாதார மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்திற்கு இட்டுச் சென்றதற்கும் பார்க் கடன் வழங்குகிறார்கள்.
1999 ஆம் ஆண்டில் டைம் பத்திரிகை வெளியிட்ட " நூற்றாண்டுகளில் ஆசியர்கள்" என்றப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் பார்க் இடம் பெற்றிருந்தாலும்,[7] கொரியர்களின் புதிய தலைமுறையினரும் ஜனநாயகமயமாக்கலுக்காகப் போராடியவர்களும் அவரது சர்வாதிகார ஆட்சி நியாயமற்றது என்று நம்புகிறார்கள். இன்று கொரியாவில் கடுமையான பிரச்சினையாக இருக்கும் பிராந்தியவாதத்தின் முக்கிய காரணங்களில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது.
வரலாற்று தரவரிசை
தொகுதென் கொரிய வரலாற்றில் மிகப் பெரிய அதிபரைப் பற்றிய 2015 ஆம் ஆண்டு தென் கொரிய காலப் கருத்துக் கணிப்பில், பார்க் 44% மதிப்பீட்டில் முதலிடத்தில் உள்ளார்.[8]
2012 இல் பார்க் சங்-கீ அதிபர் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.[9]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "The Encyclopedia of the Cold War: A Political, Social, and Military History: Park Jung Hee (1917–1979)". American Broadcasting Company. பார்க்கப்பட்ட நாள் 24 March 2013.
- ↑ Hwang, Kyung Moon A History of Korea, London: Macmillan, 2010 page 229.
- ↑ John Sullivan, ed. (1987). Two Koreas—one future?: a report. University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0819160492.
- ↑ . 中央公論新社. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4121016508.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ "우리가 기억해야 할 또 다른 4·3, '민청학련사건'". 오마이뉴스. 3 April 2013.
- ↑ "인혁당 유가족, 새누리당사 앞 항의 방문". 12 September 2012.
- ↑ Time Asia: Asians of the Century பரணிடப்பட்டது 2010-09-19 at the வந்தவழி இயந்திரம், August 1999, Retrieved 20 April 2010
- ↑ "[한국갤럽 여론조사] '나라 잘 이끈 대통령'에 국민 44% "박정희"". news.kmib.co.kr.
- ↑ "President Parkjunghee Memorial Foundation". presidentparkchunghee.org. Archived from the original on 2019-02-21. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.