பார்வதி ஜெயதேவன்

பாடகி

பார்வதி இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் பாடியுள்ள இவர் தற்போது முனைவர் பட்டத்திற்க்கான குறிக்கோளுடன் இருந்து வருகிறார்.   

பார்வதி ஜெயதேவன்
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் ஒலிப்பதிவு கலைஞர்
இசைத்துறையில்2013 ம் ஆண்டு முதல்

குடும்பம்

தொகு

பார்வதி கேரளாவின் மலப்புறத்தில் பிறந்தவராவார். இவரது பெற்றோர் ஜெயதேவன் மற்றும் சிந்துலதா ஆகிய இருவரும் கேரளாவில் ஆயுர்வேத மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.

அவர் தனது பள்ளிப் படிப்பை தேன்பாலத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியிலும், திரு இருதய முதுநிலை மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றுள்ளார். பின்னர், கணிதவியலில் இளங்கலை பட்டப்படிப்பிற்க்காக சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சேர்ந்த இவர், பயன்பாட்டுக் கணிதபிரிவின் கீழ் முதுகலை பட்டத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பெற்றுள்ளார். தற்போது கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

தொகு

பள்ளியில் படிக்கும் போதே பாடல் கலையின் மீதான ஆர்வத்தை புரிந்து, பாரம்பரிய இசையில் முறையாக பயிற்சி பெற்று, பள்ளி அளவிலான பல்வேறு இசைப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார், அம்ரிதா டிவி மூலம் ஒளிபரப்பப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு யதார்த்த நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் 2 பாகத்தின் வெற்றியாளராக 2008-2009 ஆண்டுகளில் கவனம் பெற்றுள்ளார்.

22013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4ம் பாகம் என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பான பாடும் யதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.[1]

திரைப்படத்துறை

தொகு

பின்னணிப் பாடல்

தொகு

2013 ம் ஆண்டில் அரோள் கரோலி இசையமைத்து தமிழில் வெளியான அன்பா அழகா என்ற திரைப்படத்திற்காக "கண்ணாடி பூ போல" என்ற தமிழ் பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பார்வதி அறிமுகமானார். அதன் பின்னர் மேலும் சில தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "பிரதிநாயகன்" ( காவிய தலைவனின் மலையாள பதிப்பு) என்ற திரைப்படத்தில் "ஏய் கொச்சு கல்லா" என்ற மலையாளப் பாடலை அவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பாடல் இசை இயக்குனர் இணை பாடகர்(கள்)
2013 "அன்ப அழகா" "கண்ணடி பூபோலே" அரோல் கோரெல்லி
2014 பிரதி நாயகன் "ஏய் கொஞ்சம் கல்லா" ஏஆர் ரஹ்மான் ஹரிசரண்
2014 நான் ஸ்டீவ் லோபஸ் "சிறகுகள் நான்" ஷஹாபாஸ் அமன் சித்தார்த் மேனன்
2015 கோடை மழை "பொத்தி வெச்சா" சாம்பசிவம் கார்த்திக்
2022 அர்ச்சனா 31 நாட் அவுட் "கல்யாணமனே" ரஜத் பிரகாஷ் ரஜத் பிரகாஷ், ஸ்வேதா சங்கர், லால் கிருஷ்ணா

மேற்கோள்கள்

தொகு
  1. Akila Kannadasan (2014-01-23). "Winning notes". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_ஜெயதேவன்&oldid=3706937" இலிருந்து மீள்விக்கப்பட்டது