பார்வதி தேவி (அரசியல்வாதி)

இந்தியாவின் சம்மு காசுமீர் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்

ராணி பார்வதி தேவி தேசுகிட் வாங்மோ (Rani Parvati Devi Deskit Wangmo, 1 மே 1934 – 5 நவம்பர் 2024)[1] இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த லடாக் நகர மக்களைவையின் முன்னாள் (1977-1980) உறுப்பினராவார்.[2] .

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1934 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று காங்சார் அரண்மனையில் காங்சார் அரச குடும்பத்தில் பார்வதி பிறந்தார். லாகவுல் மாவட்டத்தின் பெரிய அரச வீடாக இவ்வரச குடும்பம் கருதப்படுகிறது. தற்போது இமாச்சலப் பிரதேசத்தின் லாகவுல் மற்றும் சுபிதி மாவட்டத்தின் ஒரு பகுதியான நைமா வாங்கியலில் இவர் பிறந்தார். பார்வதி தேவி ஐந்தாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.[3]

தொழில்

தொகு

பார்வதி தேவி லடாக்கில் தான் ஈடுபடும் சமூகப் பணிகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.[3] 1958 ஆம் ஆண்டு லேவின் செயல்பாட்டுக் குழுவான நல விரிவாக்கத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

1977 இந்திய பொதுத் தேர்தலுக்கு, இந்திய தேசிய காங்கிரசு கட்சி லடாக் தொகுதியில் பார்வதி தேவியைத் தனது வேட்பாளராக்கியது. காங்கிரசின் உள்ளூர் கூட்டணிக் கட்சியான சம்மு & காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சி இவரை ஆதரித்தது.[5] ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே பார்வதி தேவியை எதிர்த்து நின்றார். பார்வதி அவரை 2,877 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் (அவரது 20,253 க்கு எதிராக 23,130 வாக்குகள்) லடாக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பு பார்வதிக்கு கிடைத்தது.[6][7] பார்வதி தேவியும் பேகம் அக்பர் யெகான் அப்துல்லாவும் மட்டுமே 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற சம்மு & காசுமீர் பெண்கள் ஆவர். [8] ஐந்து வருட காலத்தை முடிக்க முடியாமல் ஆட்சி முடிவுக்கு வந்ததால் 1980 ஆம் ஆண்டில் மற்றொரு தேர்தல் நடைபெற்றது. இந்த முறை தேசிய மாநாட்டுக் கட்சி லடாக்கில் தனது வேட்பாளரை நிறுத்தியது.[9]

லடாக்கிய கலை மற்றும் பண்பாடு மீதான நம்கியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி பார்வதி தேவி ஒரு நிறுவனர் மற்றும் தலைவர் ஆனார்.[10]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

லடாக்கின் அரச பரம்பரையைச் சேர்ந்த குஞ்சாங் நாம்கியாலை பார்வதி தேவி 1950 ஆம் ஆண்டு சூலை மாதம் 10 ஆம் தேதியன்று மணந்து கொண்டார். பார்வதியின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி 48 வயதில் இறந்தார். அப்போது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உட்பட தேவிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்.[3] அதற்கு பதிலாக பார்வதி தன் மைத்துனரை குடும்பத்திலிருந்து விலக்கி, அவருக்காக மாதாந்திர உதவித்தொகையை ஏற்பாடு செய்தார். அவர் இந்த செயலை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார். இறுதியில், நீதிமன்றத்திற்கு வெளியே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு குடும்பச் சொத்தின் ஒரு பகுதியை உடைமையாக அவர் பெற்றார்.[2]

பார்வதி தேவி லடாக்கு நகரிலுள்ள சுடோக் அரண்மனையில் வசித்தார். இது ஓர் அருங்காட்சியகமாகவும் செயல்படுகிறது.[2] குளிர்காலத்தில் பார்வதி தேவி மணாலியில் வசித்து வந்தார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. Gyalmo Deskit Wangmo, Queen of Ladakh, passes away at 90
  2. 2.0 2.1 2.2 Daniel, Vaihayasi P (3 April 1997). "Postcards from the edge, 2: Ladakh, the last Shangri-la". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  3. 3.0 3.1 3.2 "Member's Bioprofile: Parvati Devi, Shrimati". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  4. "Welfare Extension Project, Leh". Social Welfare (Central Social Welfare Board): 20. 1958. https://books.google.com/books?id=YpY73JjEtk8C. 
  5. Kashmir in Flames: An Untold Story of Kashmirʾs Political Affairs. Ali Mohammad. p. 219.
  6. "Statistical Report on the General Elections, 1977 to the Sixth Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 162. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  7. Chumikchan, Rinchen Angmo (6 December 2016). "Why are women denied justice even today in Ladakh?". Reach Ladakh. Archived from the original on 9 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  8. "Few women fielded in J-K". http://www.tribuneindia.com/2004/20040508/election.htm#6. பார்த்த நாள்: 2 November 2017. 
  9. "Statistical Report on the General Elections, 1980 to the Seventh Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 159. Archived from the original (PDF) on 18 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  10. "Contact Us – NIRLAC Ladakh". Namgyal Institute of Research on Ladakhi Art and Culture. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
  11. Tibet, a dreamt of image. Tibet House.