பாறைநெய்ப் பொறியியல்
பாறைநெய்ப் பொறியியல் (Petroleum engineering) கரட்டு எண்ணெய் அல்லது இயற்கை வளிமம் ஆகிய நீரகக் கரிமங்களின் தேட்டம், உருவாக்கம் பற்றிய செயல்முறைகளைச் சார்ந்த பொறியியல் புலமாகும்.[1] தேட்டமும் பிரித்தெடுப்பும் எண்ணெய், வளிமத் தொழில்துறையின் ஆக்க மேற்புறப் பிரிவாகும். புவி அறிவியலாளர்களின் நீரகக் கரிமத் தேட்டமும் பறைநெய்ப் பொறியியலும் இத்தொழில்துறையின் இரு அடிமேற்பரப்புப் புலங்களாகும்; இவை அடிமேற்பரப்புத் தேக்கத்தில் இருந்து பெரும அளவில் எண்ணெய், வளிமத்தைப் பிரித்தெடுப்பதில் கவனம் குவிக்கின்றன. பாறைநெய்ப் புவியியல்]], புவி இயற்பியல் இரண்டும் நீரகக் கரிமத் தேக்கப் பாறையின் நிலக் கிடப்பியல் விவரிப்பைத் தருவதில் கவனம் குவிக்கின்றன. பாறைநெய்ப் பொறியியல் புரைவாய்ந்தப் பாறைக்குள் உயரழுத்தத்தில் அமைந்த எண்ணெய், வளிமம், தண்ணீர் ஆகியவற்றின் இயற்பியல் நடத்தையைப் புரிந்துகொண்டு இந்த வாயிலில் இருந்து இவற்றை மீட்கவியன்ற பருமனளவை மதிப்பிடுவதில் கவனம் குவிக்கின்றது.
புவியியல் வல்லுனர்களும் பறைநெய்ப் பொறியாளர்களும் கூட்டாக முயன்று, தேக்கத்தில் நீரகக் கரிமங்கள் திரண்ட வாழ்நாள் சுழற்சியை வைத்து தேக்கத்தை எவ்வகையில் பயன்படுத்தி நீரகக் கரிமங்களை மீட்களாம் என தீர்மானிப்பர். இந்த்த் தீர்மானம் களப் பொருளியல் மீது உயர்ந்த தாக்கத்தை விளைவிக்கும். பாறைநெய்ப் பொறியியலுக்கு புவி இயற்பியல், பாறைநெய்ப் புவியியல், பாரைநெய் உருவாக்க மதிப்பீடு, கிணறு தோண்டல், துளைப்பியல் அல்லது துரப்பணவியல், பொருளியல், கிணறு ஒப்புருவாக்கம், தேக்கப் பொறியியல், கிணற்றுப் பொறியியல், செயற்கைத் தூக்கல் அமைப்புகள், முடித்தல் முறைகள், பாறைநெய் ஆக்கப் பொறியியல் ஆகிய சிறப்புப் புலங்களின் ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது.
இத்தொழில்துறைக்கான பணியாளர்களின் ஆட் தேர்வு இயற்பியல், வேதிப் பொறியியல், சுரங்கப் பொறியியல், ஆகிய புலங்களில் இருந்து செய்யப்படுகிறது. அடுத்த வளர்ச்சிக்கான பயிற்சி எண்னெய்க் குழுமங்களுக்கு உள்ளேயே தரப்படுகிறது.
பருந்துப் பார்வை
தொகுஇந்தத் தொழில்துறை 1914 இல் அமெரிக்கச் சுரங்கவியல், பொன்மவியல் (உலோகவியல்), பாறைநெய்ப் பொறியியல் பொறியாளர் கழகத்தில் (AIME) தொடங்கியது. முதல் பாறைநெய்ப் பொறியியல் பட்டம் 1915 இல் பிட்சுபர்கு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.[2] இதற்குப் பின்னர், இத்தொழில்துறை கூடுதலான சிக்கல் வாய்ந்த சூழல்களுக்கும் தீர்வு காணும் வகையில் படிமலர்ந்தது. கணிப் படிமங்களும் பொருள்களும் மேம்படுத்தப்பட்டன.புள்ளியியலும் நிகழ்தகவுப் பகுப்பாய்வும் கிடைத்துளைப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டன. எண்ணெய் மீடு வீதம் மேம்பட்டது, இவை பாறைநெய்ப் பொற்யாளரின் கருவிப்பெட்டியை அண்மைப் பலபத்தாண்டுகளாக வளமைப்படுத்தின. தன்னியக்கமும்[3] sensors,[4] எந்திரன்களும்[5][6] இத்துறையை மேலும் திறம்படவும் பாதுகாப்பாகவும் வென்றெடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
இத்துறை, ஆழ்கடல், ஆர்க்டிக், பாலைநிலங்கள் ஆகிய புவிவெளிகளில் நிகழ்கிறது. உயர் வெப்பநிலை, உயர் அழுத்தச் சுற்றுச்சூழலகளிலும் இத்தொழில்துறை செயல்படுகிறது. எனவே, பாறைநெய்ப் பொறியாளர்கள் வெப்பநீரியக்கவியல், புவி இயக்கவியல், அறிதிறன் அமைப்புகள் ஆகிய பல தலைப்புகளில் தேர்ச்சிபெற வேண்டியவராக உள்ளார்.
பாறைநெய்ப் பொறியாளர் கழகம் பாறைநெய்ப் பொறியாளருக்கான மிகப் பெரிய தொழில்முறைக் கழகமாகும் இது எண்ணெய், வளிமத் தொழில்துறைக்கான தகவலையும் பிற வாயில்களையும் வெளியிடுகிறது. இது இலவச இணையக் கல்வியையும் தருகிறது (webinars). இதில் உறுப்பினர்கள் தொழில்நுட்பச் சிக்கல்களையும், சிறந்த நடைமுறைகளையும் பிற தலைப்புகளையும் விவாதிக்கலாம். உறுப்பினர்கள் தம் வளர்ச்சிக்கான வாய்ப்பையும் திறமையையும் அறிவையும் பெற SPE வளர்நிலை மேலாண்மைக் கருவியையும் அணுகலாம்.[7] SPE publishes peer-reviewed journals, books, and magazines.[8] உறுப்பினர்கள் Journal of Petroleum Technology இதழுக்கு முகமைப்பணம் கட்டி, இதழ் வெளியிடும் பிற வெளியீடுகளில் கழிவு பெறலாம்.[9] இவ்வுறுப்பினர்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்லவும் பயிற்சி வகுப்புகளிலும் கூட பதிவுக் கட்டணத்தில் கழிவு பெறலாம்.[9] இது பட்ட, பாட்டமேற்படிப்புகளுக்கு உதவிநல்கையும் ஆய்வுநல்கையும் தருகிறது.
ஊதியங்கள்
தொகுபலவகைச் சிறப்புப் பணிகள்
தொகுபாறைநெய்ப் பொறியியலாளர்கள் பலவகைச் சிறப்புப் பிரிவுகளில் பிரிந்து பணிபுரிகின்றனர்:[1]
- தேக்கப் பொறியாளர்கள் சரியான பணியாளரைத் தேர்வு செய்தும் எண்ணெய், வளிமப் பிரித்தெடுப்பு வீதத்தையும் மேம்பாடான எண்னெய் மீட்பு நுட்பங்களைப் பயன்படுத்தியும் எண்ணெய், வளிம ஆக்கத்தை உகப்புநிலைப் படுத்துகின்றனர்.
- துளைப்புப் பொறியாளர்கள் தேட்ட்துக்கானதுளைப்பு, பிரித்தெடுப்பு உட்செலுத்து கிணறுகள் ஆகியவற்றின் தொழில்நுட்பக் கூறுபாடுகளை மேலாளுகின்றனர்.
- முடித்தல் பொறியாளர்கள் (இவர்கள் அடிமேற்பரப்புப் பொறியாளர்கள் எனவும் வழங்கப்படுவர்) எண்ணெயும் வளிமமும் பிரித்தெடுக்கும் வாய்ப்பு வீதம் பெருமமாக அமைதலையும் கிணறு நிலைப்பொடு இருத்தலையும் உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைத்து நடைமுறைபடுத்துவதற்கேற்ற நுட்பங்களைப் பயன்படுத்தி கிணறுகளைக் கட்டிமுடிப்பர்.
- ஆக்கப் பொறியாளர்கள் தேக்கத்துக்கும் கிணற்றுக்கும் நடுவில் உள்ல இடைமுகத்தை மேலாளுகின்றனர். இப்பணியில் துளைப்புகள், மணற் கட்டுபாடு, அடித்துளைவழிப் பாய்வுக் கட்டுபாடு, அடித்துளைக் கண்காணிப்புக் கருவி ஆகியவையும் செயற்கைத் தூக்குமுறைகளை மதிப்பிடுதலும் ஆக்கப் பாய்மங்களைப் (எண்ணெய், இயற்கை வளிமம், தண்ணீர்) பிரித்தெடுக்கும் மேற்பரப்புக் கருவிகளைத் தேர்வு செய்தலும் அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Petroleum Engineers: Occupational Outlook Handbook: U.S. Bureau of Labor Statistics". www.bls.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-06.
- ↑ "Petroleum Engineering". Britannica. பார்க்கப்பட்ட நாள் 3 February 2012.
- ↑ "Drilling Automation". Journal of Petroleum Technology. December 14, 2017.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "JPT Flow Sensor Technology Seeks to Replace the Coriolis Meter". www.spe.org. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
- ↑ "JPT Competing Companies Building Robots to Place Receivers". www.spe.org. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
- ↑ "JPT Robot Removes Operators From Extreme Environments". www.spe.org. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
- ↑ "SPE Member Resource Guide" (PDF). Society of Petroleum Engineers. பார்க்கப்பட்ட நாள் December 12, 2017.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Publications | The Society of Petroleum Engineers". www.spe.org. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
- ↑ 9.0 9.1 "Professional Membership Benefits | Society of Petroleum Engineers". www.spe.org. பார்க்கப்பட்ட நாள் 2017-12-14.
வெளி இணைப்புகள்
தொகு- The Society of Petroleum Engineers
- Schlumberger Oilfield Glossary: An Online Glossary of Oilfield Terms
- Society of Petroleum Evaluation Engineers
- Petroleum Engineering Schools பரணிடப்பட்டது 2013-05-23 at the வந்தவழி இயந்திரம்
- What is Forensic Petroleum Engineering? பரணிடப்பட்டது 2013-07-03 at the வந்தவழி இயந்திரம்
- Petroleum Engineering - Best Petroleum Engineering Schools & Colleges, Jobs in USA பரணிடப்பட்டது 2018-03-20 at the வந்தவழி இயந்திரம்
- About Petroleum Engineering
- Career Opportunities in Petroleum Engineering பரணிடப்பட்டது 2016-11-12 at the வந்தவழி இயந்திரம்