பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர்
பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர் (Balakrishnabuwa Ichalkaranjikar) (1849-1926) இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் கியால் வகையின் இந்தியப் பாடகர் ஆவார். குவாலியர் கரானாவை (பாடும் பாணி) கற்றுக் கொண்டு அதை மகாராட்டிராவிற்கு கொண்டு வந்தார். [1]
பாலகிருட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர் | |
---|---|
பிறப்பு | 1849 |
பிறப்பிடம் | மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | 1926 (வயது 77) |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இந்திய பாரம்பரிய இசையை பாடுதல் |
இசைத்துறையில் | 1867–1920 |
ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்
தொகுபாலகிட்டிணபுவா இச்சல்கரஞ்சிகர் மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் இந்திய பாரம்பரிய இசையின் கயல் வகையின் மெக்காவான குவாலியருக்குப் பயணம் செய்தார். மேலும் வாசுதோராவ் ஜோசியின் கீழ் கற்றுக்கொண்டார். பின்னர் மகாராட்டிரா திரும்பினார். மீரஜ் அருகில் வசித்து வந்தார்.
சீடர்கள்
தொகுஇவரது பிரதான சீடர்களில் நீலகாந்த்புவா மிராஜ்கர், விஷ்ணு திகம்பர் பலூசுகர், தனது மகன் அன்னபுவா, அனந்த் மனோகர் ஜோசி (அந்து-புவா), மிராஷி புவா , வாமன்புவ சாபேகர் ஆகியோர் அடங்குவர். அன்னபுவா இவருக்கு முன்னரே இறந்து போனார். மகனின் மரணம் அவரது இறுதி ஆண்டுகளில் அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
குறிப்புகள்
தொகு- ↑ Susheela Misra (1981). Great masters of Hindustani music. Hem Publishers. p. 71. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.