பாலாம்பிகை நடராசா

பாலாம்பிகை நடராசா (இறப்பு: மே 24, 2012[1] இலங்கை வானொலி எழுத்தாளரும் இசைக்கலைஞரும் ஆவார்.

பாலாம்பிகை நடராசா
பிறப்புமட்டக்களப்பு, இலங்கை
இறப்புமே 24, 2012
கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுவானொலிக் கலைஞர், நாடகாசிரியர்
சமயம்சைவ சமயம்
வாழ்க்கைத்
துணை
செல்லப்பா நடராசா
பிள்ளைகள்இல்லை

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

பாலாம்பிகை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் பிறந்தவர். மதுரை சீதாராம் என்பவரைக் குருவாகக் கொன்டு வீணையும் வாய்ப்பாட்டையும் முறையாகக் கற்றவர்[2]. இவரது கணவர் செல்லப்பா நடராசா பிரதமர் பணிமனையில் இலங்கை நிருவாக சேவை அலுவலராகப் பணியாற்றியவர்.

நாடகங்கள் எழுதல்

தொகு

தனது இசை அறிவைப் பயன்படுத்தி இலங்கை வானொலியில் பல இசை நாடகங்களை எழுதினார். சினோவைட் கதையை வெண்பனியாளும் ஏழு குள்ளர்களும் என்ற தலைப்பில் நாட்டிய நாடகமாக எழுதினார். இந்த நாடகம் மேடை நாடகமாகவும் பல இடங்களில் மேடையேறியது. இலங்கை வானொலியில் வில்லிப்பாட்டு, இசைச்சித்திரம், அறநெறி, உரைச்சித்திரம் எனப் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

டொக்டர் ரஞ்சிதம் என்ற துப்பறியும் நாடகத்தை கிருஷ்ணர் என்ற புனைப்பெயரில் எழுதினார். பல நாட்டிய ஆசிரியர்களுக்கு நாட்டிய நாடகங்களை எழுதிக் கொடுத்துள்ளார். இவர் எழுதிய வானொலி நாடகங்களின் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்பட்டது[2].

தொலைக்காட்சியில்

தொகு

இலங்கைத் தொலைக்காட்சியில் இவர் எழுதி இயக்கிய மீராப்பிரபு என்ற என்ற நாடகம் 1984 ஆம் ஆண்டில் ஒளிபரப்பானது.

பெற்ற பட்டங்கள்

தொகு
  • சங்கீதஜோதி ரத்னா (ரிசிகேஸ் சிவானந்த சரஸ்வதி)
  • வீணாகான வித்தகி (இலங்கை பிரதேச அபிவிருத்தி அமைச்சு)
  • கலாஜோதி (இந்து கலாசார திணைக்களம், 1994)
  • சாயி கான கலா பூஷ்ண சரஸ்வதி (கொழும்பு சத்திய சாயி நிலையம்)

மேற்கோள்கள்

தொகு
  1. Obituaries பரணிடப்பட்டது 2012-06-30 at the வந்தவழி இயந்திரம், சண்டே ஒப்சேர்வர், மே 27, 2012
  2. 2.0 2.1 கலாஜோதி பாலாம்பிகை நடராசா, வீரகேசரி, சூன் 24, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாம்பிகை_நடராசா&oldid=3220624" இலிருந்து மீள்விக்கப்பட்டது