பாலின அடையாளம்
பாலின அடையாளம் (Gender identity) என்பது ஒருவர் தன் பாலினத்தை எவ்வாறு உணர்கிறார் அதாவது அடையாளப் படுத்திக் கொள்கிறார் என்பதைக் குறிக்கும்.[1] பாலின அடையாளம் ஒருவருக்குப் பிறப்பின்வழி உயிரியலாக அமையும் பாலாக அமையலாம் அல்லது அதில் இருந்து வேறுபடலாம்.[2]
விளக்கமாக, ஒருவர் தன்னுடய பாலினத்தை எவ்வாறு நடைமுறையில் பட்டறிகிறாரோ அதுவே அவருடய பாலின அடையாளம் (gender identity) ஆகும். அதாவது, ஒருவர் தான் எந்த பாலைச் சேர்ந்தவர் என்று உணர்கிறாரோ அதுவே அவரின் பாலின அடையாளம் ஆகும். பாலினம் என்பது ஒரு சமூகப் பண்பாட்டு உருவாக்கம் ஆகும். பொதுவாக ஆண், பெண் என்ற இரு பால்கள் மட்டுமே சமூகத்தால் ஏற்கப் படுகின்றன.
பாலின வெளிப்பாடு என்பது ஒருவரது பாலின அடையாளத்தின் வெளிப்பாடு ஆகும்; ஆனால், இந்நிலை எப்போதும் அமையவேண்டும் என்பதில்லை.[3][4] ஒருவர் குறிப்பிட்ட பாலினப் பாத்திரத்துக்கு உரிய நடத்தைகளையும் உளப்பான்மைகளையும் தோற்ற நிலைமைகளையும் வெளிப்படுத்தினாலும், அவ்வெளிப்பாடு கட்டாயமாகப் பாலின அடையாளமாக அமையவேண்டியதில்லை. பாலின அடையாளம் எனும் சொல்லை முதலில் இராபர்ட் ஜே. சுட்டோல்லர் 1964 இல் உருவாக்கினார்.[5]
அனைத்து சமூகங்களும் பிற சமூக உறுப்பினர்களில் இருந்து வேறுபடும் அல்லது இணையும் ஒருவரது தன்னடையாளத்தைச் சார்ந்த பாலினக் கருத்தினங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.[6] பெரும்பாலான சமூகங்களில், ஆண், பெண்ணைக் குறிக்கும் இயற்பண்புகளைச் சார்ந்த அடிப்படை பாலினப் பிரிவு நிலவுகிறது;[7] இந்தவகைப் பெண்மை, ஆண்மை எனும் பாலின இருமையை பால், பாலினம் சார்ந்த (பால், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு போன்ற) அனைத்துக் கூறுபாடுகளிலும் அனைத்து மக்களும் பின்பற்றுகின்றனர்.[8] சிலர் தாம் பிறப்பின்வழி உயிரியலாகப் பெற்ற பால் அமைவை அதன் அனைத்து முகங்களிலும் அடையாளப் படுத்திக் கொள்வதில்லை;[9] இதில் பெயர்பாலினரும் இருமையை ஏற்காத விதிர்பாலினரும் (genderqueer) அடங்குவர். மேலும், சில சமூகங்களின் உள்ள மூன்றாம் பாலினரும் (அலிகளும்) அடங்குவர்.
வழக்கமாக, பாலின அடையாளம் ஒருவரின் மூன்றாம் அகவையில் தோன்றும்.[10][11] மூன்றாம் அகவைக்குப் பிறகு, இந்நிலையை மாற்றுவது அரிது.[11] அப்படி மாற்ற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாமல் பாலினக் கலைவு ஏற்பட வாய்ப்புள்ளது.[12] பாலின அடையாளம் உயிரில், சமூகக் காரணிகளால் விளைகிறது.
உருவாகும் அகவை
தொகுபாலின அடையாளம் எப்படி, எப்பொழுது உருவாகிறது என்பது பற்றிய பல கோட்பாடுகள் உள்ளன. குழந்தைகள் மொழி பேச இயலாத நிலையால் ஆய்வாளர்கள் மறைமுகச் சான்றுகளைக் கொண்டே கற்பிதங்களை மேற்கொள்ள நேர்வதால் இக்கருப்பொருளை பயில்வது அரிதாகவே உள்ளது.[12] 18 மாதத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே பாலின விழிப்புணர்வோடு சில பாலின வெளிப்பாடுகளைக் கணிசம்மாக அறிந்திருக்கலாம் என ஜான் மோனி குறப்பிடுகிறார்; மூன்றாம் அகவை வரை பாலின அடையாளம் உருவாதல் இல்லை என இலாரன்சு கோகில்ப்பர்கு வாதிடுகிறார்.[12] இந்நிலையில் குழந்தைகள் தமது பாலின அடையாளம் பற்றி உறுதியான கூற்றுகளை தெரிவிக்கலாம்[12][13] மேலும் தம் பாலின அடையாளத்துக்கு ஏற்ற நடவடிக்கைகளையும் பொம்மைகளையும் தேர்வு செய்யலாம்.[12] என்றாலும் அதற்குள் அவர்கள் பாலினம் பற்றி முழுதாக புரிந்துகொள்வதில்லை.[13] மூன்று அகவைக்குப் பிறகு அவர்களின் கருநிலைப் பாலின அடையாளத்தை மாற்றுதல் மிகமிக அரிது,[14] அப்படி மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் பாலினக் குலைவை ஏற்படுத்திவிடும்.[12][15] பாலின அடையாளச் சீர்மையாக்கம் நான்காவது அகவை முதல்[14]ஆறாவது அகவை வரை நீடிக்கிறது;[12][16] மேலும் குமரப் பருவம் வரை தொடர்கிறது.[14]
மார்ட்டினும் உரூபிளும் இந்த நிகழ்வை மூன்று கட்டங்களாகப் பிரிக்கின்றனர்: (1) நடைபயில் குழந்தைகளும் பள்ளிமுன் வகுப்பினரும் சமூகம் வகுத்துள்ள பாலினப் பான்மைகளைக் கற்கின்றனர்; (2) 5 முதல் 7 ஆண்டு அகவை நிரம்பிய சிறார், பாலின அடையாளம் திரட்சியுற்று கட்டுகோப்புறுகிறது; (3) முழுநிலைக் கட்டுகோப்புக்கு உச்சத்துக்குப் பின்னர், சமூகம் வரையறுக்கும் பாலினப் பாத்திரங்களில் நெகிழ்திறம் உருவாகிறது.[17] பார்பார நியூமன் இதை நான்கு கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கிறார்: (1) பாலினக் கருத்தினத்தைப் புரிந்துகொள்ளல், (2) பாலினப் பாத்திரம் குறித்த செந்தரங்களையும் வழமைகளையும் கற்றல், (3) பெற்றோரை இனம்பிரித்து உணர்தல், (4) பாலின விருப்பத் தேர்வை உருவாக்கிக் கொள்ளல்.[13]
பன்னாட்டு முகமைகளின்ப்டி, எளிய பாலியல் கல்வி, பாலினம், பாலின அடையாளம் பற்றிய விழிப்புணர்வு சார்ந்த விவாதங்களை எழுப்புகிறது.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sexual Orientation and Gender Expression in Social Work Practice, edited by Deana F. Morrow and Lori Messinger (2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0231501862), p. 8: "Gender identity refers to an individual's personal sense of identity as masculine or feminine, or some combination thereof."
- ↑ Campaign, Human Rights. "Sexual Orientation and Gender Identity Definitions".
- ↑ Summers, Randal W. (2016). Social Psychology: How Other People Influence Our Thoughts and Actions [2 volumes]. ABC-CLIO. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610695923.
- ↑ American Psychological Association (December 2015). "Guidelines for Psychological Practice With Transgender and Gender Nonconforming People". American Psychologist 70 (9): 861. doi:10.1037/a0039906. பப்மெட்:26653312. http://www.apa.org/practice/guidelines/transgender.pdf.
- ↑ STOLLER, ROBERT J. (November 1964). "THE HERMAPHRODITIC IDENTITY OF HERMAPHRODITES". The Journal of Nervous and Mental Disease 139 (5): 453–457. doi:10.1097/00005053-196411000-00005. https://archive.org/details/sim_journal-of-nervous-and-mental-disease_1964-11_139_5/page/453.
- ↑ V. M. Moghadam, Patriarchy and the politics of gender in modernising societies, in International Sociology, 1992: "All societies have gender systems."
- ↑ Carlson, Neil R.; Heth, C. Donald (2009), "Sensation", in Carlson, Neil R.; Heth, C. Donald (eds.), Psychology: the science of behaviour (4th ed.), Toronto, Canada: Pearson, pp. 140–41, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0205645244.
{{citation}}
: Invalid|ref=harv
(help) - ↑ Jack David Eller, Culture and Diversity in the United States (2015, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1317575784), p. 137: "most Western societies, including the United States, traditionally operate with a binary notion of sex/gender"
- ↑ எடுத்துகாட்டாக, "பெயர்பாலினர்களைக் கூறலாம் [இவர்கள் அனைத்துச் சமூகங்களிலும் நிலவும் உடைமுறையை ஏற்பதில்லை]." (G. O. MacKenzie, Transgender Nation (1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0879725966), p. 43.) " ஒவ்வொரு பண்பாட்டிலும் மாற்றுடை விரும்பிய/அணிந்த ஆண்களும் பெண்களும் காலந்தோறும் இருந்துள்ளனர் எனபதற்கான பதிவுகள் கிடைக்கின்றன.னைது இது சமூகந்தோறும் அமையும் இயல்பான நிகழ்வே எனலாம்." (Charles Zastrow, Introduction to Social Work and Social Welfare: Empowering People (2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 128554580X), p. 234, quoting the North Alabama Gender Center.)
- ↑ Bukatko, Danuta; Daehler, Marvin W. (2004). Child Development: A Thematic Approach (in ஆங்கிலம்). Houghton Mifflin. p. 495. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-33338-7.
- ↑ 11.0 11.1 Hine, F. R.; Carson, R. C.; Maddox, G. L.; Thompson, R. J. Jr; Williams, R. B. (2012). Introduction to Behavioral Science in Medicine (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4612-5452-2.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 Boles, 2013. pp. 101–02.
- ↑ 13.0 13.1 13.2 Newmann, Barbara (2012-12-20). Development Through Life: A Psychosocial Approach. Cengage Learning. p. 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1111344665.
- ↑ 14.0 14.1 14.2 J. A. Kleeman, The establishment of core gender identity in normal girls. I.(a) Introduction;(b) Development of the ego capacity to differentiate, in the Archives of Sexual Behavior, 1971: "Though gender identity formation continues into young adulthood and core gender identity establishment extends into the fourth year and possibly longer, core gender identity is fairly firmly formed by age 3[.]"
- ↑ E. Coleman, Developmental stages of the coming out process, in Journal of homosexuality, 1982: "Core gender and sex-role identities are well-formed by the age of 3 (Money & Ehrhardt, 1972). This is believed because attempts to reassign gender identity after age 3 result in further gender dysphoria."
- ↑ Stein MT, Zucker KJ, Dixon SD. December, 1997. "Gender Identity", The Nurse Practitioner. Vo. 22, No. 12, p. 104
- ↑ Martin, C.; Ruble, D. (2004). "Children's Search for Gender Cues Cognitive Perspectives on Gender Development". Current Directions in Psychological Science 13 (2): 67–70. doi:10.1111/j.0963-7214.2004.00276.x. https://semanticscholar.org/paper/fb8fa2e2ad2f05d93558e85000bc802a56024fc3.
- ↑ International technical guidance on sexuality education: An evidence-informed approach (PDF). Paris: UNESCO. 2018. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-3-100259-5.
நூல்தொகை
தொகு- Boles, Jacqueline, and Tatro, Charlotte, Androgyny (subsection Gender-identity formation), in Men in Transition: Theory and Therapy, 2013, edited by Kenneth Solomon
- Marciano, Avi (2014). Living the VirtuReal: Negotiating Transgender Identity in Cyberspace. Journal of Computer-Mediated Communication, 19(4), 824–38.
வெளி இணைப்புகள்
தொகு- "Gender identity." Encyclopædia Britannica Online
- Dr. Money And The Boy With No Penis
- International Foundation for Gender Education
- National Center for Transgender Equality
- National Transgender Advocacy Coalition
- Gender PAC
- Gender Spectrum
- Transgender Law Center
- Gender Issues – Human Rights
- Human Rights Campaign Foundation, Transgender Resources for the Workplace
- World Professional Association for Transgender Health
- Genderology Directory Project, International listing of service providers for those affected by GID
- Gender Identity Research and Education Society (GIRES), British Charity encouraging and reporting on research into gender variance
- Gender Anarchy Project
- TransFemmeButch A forum and discussion board for trans men, femmes, and butches
- Born Free and Equal – Sexual orientation and gender identity in international human rights law (OHCHR)