பாலியல் தொழில் (ஹொங்கொங்)
பாலியல் தொழில் (Prostitution in Hong Kong) என்பது ஹொங்கொங்கில் சட்டப்பூர்வமானது ஆகும். ஆனால் பெண்களை அடிமையாக பாலியல் தொழிலில் ஈடுப்பத்துவதோ, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதோ, பாலியலில் தொழில் செய்யும் ஒரு பெண் அல்லது வேறு ஒருவர் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அல்லது ஈர்க்கும் வகையில் செயல்படுவதோ ஹொங்கொங்கில் சட்டவிரோதமானது ஆகும். [1] ஹொங்கொங்கில் பாலியல் தொழில் புரிவோர் ஒவ்வொரு நகரிலும் உள்ளனர். அவர்களுக்கான விளம்பரச் சேவை செய்யும் சஞ்சிகைகள், நாளிதழ்கள் என நூற்றுக்கணக்கில் உள்ளன. நாளாந்த செய்தித்தாள்களில் வரும் விளம்பரச் சேவையில் பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களின் விளம்பரச் சேவையாகவே இருக்கும்.
விளம்பரம் செய்வோர், தமது மார்பின் அளவு, உடம்பின் அளவு, நிறை, உயரம், வயது, பேசும் மொழி, விலை போன்றவற்றைக் குறித்திருப்பதுடன் அவர்களது கவர்ச்சியான புகைப்படங்களையும் இணைத்திருப்பர். இணையத்திலும் இவர்களுக்கான சட்டப்பூர்வமான விளம்பரத் தளங்கள் பல உள்ளன. அதாவது ஹொங்கொங் அரசாங்கம் பாலியல் தொழிலாளர்கள் இணையத்தளங்களின் ஊடாக விளம்பரப்படுத்துக்கொள்வதற்கான சட்டப்பூர்வமான அனுமதியையும் வழங்கியுள்ளது. [2] அத்தளங்களிலும் அவர்கள் தமது நிறை, உயரம், வயது, உடல் அளவுகள், பேசும் மொழி, கட்டணம், மாதிரிப்படங்கள், தொழில் புரியும் முகவரி, கூகில் மெப், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம் உட்பட அனைத்து விபரங்களையும் கொடுக்கப்படுகின்றது. [3]
ஹொங்கொங்கில் பாலியல் தொழிலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உள்ளன. அவைகளாவன...
பாலியல் தொழிலாளர்கள்
தொகுஹொங்கொங்கில் பாலியல் தொழில் புரிவோர் அதிகமானோர் சீனப் பெண்களாவர். இவர்கள் ஹொங்கொங்கிற்கு சுற்றுலா வீசாப் பெற்று வந்து வீசா முடியும் காலவரையரையில் இருந்து தொழில் புரிவோர்களாகும். அதனைத்தவிர ஹொங்கொங் பெண்கள், யப்பானியப் பெண்கள், மலேய் பெண்கள், பிலிப்பியன் பெண்கள், ரசுயாப் பெண்கள், ஐரோப்பியப் பெண்கள் என பல்வேறு நாட்டவர்களும் இருப்பதாக அறியமுடிகிறது. சிலர் கௌரவமான உயர் பணியில் இருப்போரும் பகுதி நேரத் தொழிலாக பாலியல் தொழிலில் ஈடுப்படுவோர் உள்ளனர். இவரக்ளை வீதிகளில் காண்பது அரிது.
இளஞ்சிவப்பு குழல் மின்விளக்கு
தொகுஇப்பாலியல் தொழில் புரிவோருக்கான ஒரு தனிப்பட்ட வீதியென்று ஒன்று இல்லை. ஹொங்கொங்கில் ஏனைய வணிகக் கடைகளின் மத்தியிலேயே பாலியல் தொழில் புரிவதற்கான இடங்களும் காணப்படுகின்றன. அவற்றை வீதியில் செல்வோர் இணங்கண்டு கொள்ளும் வகையில் இளஞ்சிவப்பு குழல்மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த இளஞ்சிவப்பு குழல்மின் விளக்குகளே அங்கே பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்பதற்கான அடையாளமாகும். அத்துடன் தெருவில் விலை விளம்பரப் பலகையும் காணப்படும். சிலவிடங்களில் முன்பார்வை இலவசம் (Preview Free) என்றும் விளம்பரங்கள் போடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டணக் கழிவுகள் இருப்பதாகவும் விளம்பரங்கள் இடப்பட்டுள்ளன.
ஹொங்கொங் பாலியல் தொழில் பற்றிய திரைப்படங்கள்
தொகுஹொங்கொங்கின் பாலியல் தொழில் பற்றிய (பாலியல் திரைப்படங்கல்ல) திரைப்படங்களும் நிறைய உள்ளன. அவற்றில் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் சிலவற்றின் பெயர்கள்:
- The World of Suzie Wong (film)|The World of Suzie Wong (1961)
- Call Girl 1988 (Yìngzhào Nǚláng Yījiǔbābā)
- Hong Kong Gigolo (1990), starring Simon Yam
- Girls Without Tomorrow 1992 (1992), starring Vivian Chow
- Call Girls '94 (1994)
- Durian Durian (2000), directed by Fruit Chan
- Hollywood Hong-Kong (2001), directed by Fruit Chan
- Public Toilet (film)|Public Toilet (2002), directed by Fruit Chan
- Golden Chicken (2002), starring Sandra Ng
- Golden Chicken 2 (2004), starring Sandra Ng
- Whispers and Moans (2007) a film by Herman Yau based on the book of the same name starring Athena Chu, and Mandy Chiang
மேற்கோள்கள்
தொகு- ↑ United States Department of State, "2008 Human Rights Report: China (includes Tibet, Hong Kong, and Macau)", Bureau of Democracy, Human Rights, and Labor, 2008 Country Reports on Human Rights Practices, February 25, 2009
- ↑ Internet Pimps in Hong Kong
- ↑ ஹொங்கொங் நகரங்கள் வாரியாகப் பாலியல் தொழிலாளர்கள்
வெளியிணைப்புகள்
தொகுஒங்கொங்:விக்கிவாசல் |
- Wan Chai Bar Girls பரணிடப்பட்டது 2008-12-30 at the வந்தவழி இயந்திரம்
- Whispers and Moans by Yeeshan Yang பரணிடப்பட்டது 2011-07-08 at the வந்தவழி இயந்திரம்
- Hong Kong Guide பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம் Hong Kong Escorts