பாலி சந்திரா

பாலி சந்திரா (Pali Chandra) (என்கிற சிறீவஸ்தவா) இவர் ஓர் கதக் நடனக் கலைஞரும், நடன இயக்குநரும், கல்வியாளரும் சமூக ஆர்வலரும் மற்றும் துபாய் மற்றும் சுவிட்சர்லாந்தின் நடத்திவரும் 'குருகுல்' என்ற அமைப்பின் கலை இயக்குநரும் ஆவார். [1] இவரது நிகழ்ச்சிகள், ஆக்ஸ்போர்டு, பர்மிங்காம், லிவர்பூல், பிராட்போர்டு, சியாட்டில் மற்றும் ஆங்காங் பல்கலைக்கழகங்கள்; லண்டன் நடனப் பள்ளி, தற்கால கலை மற்றும் பெர்லின் அருங்காட்சியகம் போன்ற ஒரு சில இடங்களைக் கொண்டுள்ளன, பாலி சந்திராவின் விரிவுரைகள் மற்றும் பட்டறைகள் ஒரு தசாப்தங்களுக்கும் மேலாக நடந்து வருகின்றன. இங்கிலாந்தின் மதிப்புமிக்க இம்பீரியல் சொசைட்டி ஆஃப் டீச்சர்ஸ் ஆஃப் டான்சிங் என்ற அமைப்பின் கதக் பாடத்திட்டத்தை வகுத்த செயற்குழுவில் இவர் இணைந்துள்ளார்.

பாலி சந்திரா துபாயில் நவினாயிகாவாக நடனமாடுகிறார். அக்டோபர் 2015. புகைப்பட உதவி: குருகுல், துபாய்

ஒரு நடிகராகவும் நடன இயக்குநராகவும், இவரது எண்ணற்ற தயாரிப்புகள் அரங்கேற்றப்பட்டு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கதக்கை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் பாலி சந்திரா முக்கியப் பங்கு வகித்துள்ளார். இவரது தயாரிப்புகள் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து மிகச் சிறந்த சில கதைகளைக் குறிக்கின்றன. நவீன பார்வையாளர்களுக்கு அருமையான அவதாரமாக மாற்றப்பட்டுள்ளன. [2]

தொழில்

தொகு

மறைந்த குரு விக்ரம் சிங், [3] பண்டிட் ராம் மோகன் மகாராஜ், [4] மற்றும் லக்னோ கரனாவின் திருமதி. கபிலா ராஜ் [5] போன்றோரிடம் பாரம்பரிய கதக் நடனத்தைக் கற்றார். பாரம்பரிய மற்றும் சமகால கதக்கின் ஒரு கலைஞராக, இவர் தனது சிறந்த நடனத்தால் அங்கீகரிக்கப்பட்டார். அபிநயம் என்ற கலை வெளிப்பாட்டின் திறமை மற்றும் நிபுணத்துவத்தைப் பெறும் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட லச்சு மகாராஜ் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு குழு உறுப்பினராகவும், நடன ஆசிரியர்களுக்கான இம்பீரியல் சமூகம், மற்றும் [6] கலாச்சார உறவுகளுக்கான இந்திய அமைப்பின் ஒரு வரிசைப்படுத்தப்பட்ட உறுப்பினராக இருக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

தொகு

1967ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி லக்னோவில் பிறந்த பாலி, தனது ஆறாவது வயதில் நடனமாடத் தொடங்கினார். ஆரம்பத்தில், இவர் ஒரு நடனக் கலைஞராக விரும்பினார். ஆனால் நடனத்தைப் பாடமாக எடுக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே ஒரு இந்துஸ்தானி பாடகரானார். [7] லக்னோ கதக் கேந்திரவின் சங்கீத நாடக அகாதமியில் தனது குரு விக்ரம் சிங்கேயின், [8] கீழ் தனது எட்டு வயதில் ஒரு நடனக் கலைஞராக தனது திறனைக் காட்டியபின் முறையான பயிற்சியைப் பெற்றார். அங்கு படிக்கும் போது, பாலியின் திறமையை நம்பிய பண்டிட் ராம் மோகன் மகாராஜ் [4] மற்றும் கபிலா ராஜ் [5] ஆகியோரின் கீழ் பயிற்சியினைப் பெற்றார்.

கல்வி

தொகு

பாலி சந்திரா 1987ஆம் ஆண்டில் லக்னோவின் அவத் பெண்கள் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் மானுடவியலில் பட்டம் பெற்றார். பின்னர், லக்னோ பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், பழங்குடி இசை மற்றும் காடி பழங்குடியினரின் நடனம் குறித்த ஆராய்ச்சிக்காக தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். [9]

குருகுல்

தொகு

பாலி சந்திரா, துபாய் மற்றும் சுவிட்சர்லாந்தின் "'குருகுல்'"' என்ற நடனப்பள்ளியை நிறுவி அதன் கலை இயக்குனராக இருக்கிறார். குருகுல் அதன் முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்துடன் கதக்கின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அதன் அனைத்து தூய்மையிலும் அதன் மாணவர்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. அங்கு நடன வடிவம் நடைமுறையில் உள்ளது. மேலும், யோகாவின் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கிய அதன் உண்மையான வடிவத்தில் பகிரப்படுகிறது. [10]

குறிப்புகள்

தொகு
  1. "Welcome to Gurukul". Gurukuldubai.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  2. https://www.natyasutraonline.com/kathak/gurupalichandra
  3. Projesh Banerji (1927-01-22). "Dance in Thumri". Books.google.co.uk. p. 99. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  4. 4.0 4.1 "Behance". Behance.net. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  5. 5.0 5.1 "Kapila Raj (Sharma) A Legendary Kathak Dancer. - Apni Maati: Personality". Spicmacay.apnimaati.com. 2012-03-03. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  6. "Indian council for cultural relations empanelment unit" (PDF). Indian Council for Cultural Relations. Archived from the original (PDF) on 2018-02-19.
  7. "Born to dance". 2012-08-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  8. Sunil Kothari. "Kathak, Indian Classical Dance Art". Books.google.co.uk. p. 32. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  9. "About Gaddi Community of Himachal Pradesh". Discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-11.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-02-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_சந்திரா&oldid=4001160" இலிருந்து மீள்விக்கப்பட்டது