பாலைவனத் தந்தையர்கள்

பாலைவனத் தந்தையர்கள் என்போர் 3ஆம் நூற்றாண்டளவில் எகிப்தின் சுகேடிசு பாலைவனத்தில் வாழ்ந்த கிறித்தவ வனவாசிகள், தவசிகள் மற்றும் துறவிகளைக் குறிக்கும். இவர்களின் அறிவுரைகள் அபோப்தெக்மதா பாட்ரம் (Apophthegmata Patrum) என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகை தந்தையர்களுல் மிகவும் அறியப்படுபவர் புனித வனத்து அந்தோனியார் ஆவார். இவர் 270/271 ஆண்டளவில் பாலைவனத்தில் குடியேறினார் இவரே கிறித்தவ பாலைவன வனவாசத்தை துவங்கியவர் ஆவார். 356இல் இவர் இறந்தபோது ஆயிரக்கணக்கானோர் இவரின் வழியினைப்பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்துவந்தனர் எனவும் அதிக மக்கள் தொகையினால் பாலைவனம் நகரமானது எனவும் இவரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் அலெக்சாந்திரியா நகர அத்தனாசியார் குறிக்கின்றார்.[1]

Coptic icon of புனித வனத்து அந்தோனியார்.

கிறித்தவத்தின் வளர்ச்சியில் பாலைவனத் தந்தையர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். முதலில் தனித்திருந்து செபிப்பதர்காகக்கூடிய சிறு துறவிகளின் கூட்டத்திலிருந்து இத்தகைய அமைப்பு உருவானது. இவையே பின்னாட்களில் கிறித்தவ துறவிகளுக்கான எடுத்துக்காட்டாய் அமைந்தது. புனித பெனடிக்டின் சபைச்சட்டங்கள் இவர்களின் வாழ்வின் எடுத்துக்காட்டின் அடிப்படையிலிருந்தே பெறப்பட்டது. நடுக் காலத்தில் துறவற அவைகளின் சீர்திருத்முயற்சிகளுக்கு இவர்களின் வாழ்வே அடிப்படையாகவும் வழிகாட்டியாகவும் பயன்படுத்தப்பட்டது. சீர்திருத்தத் திருச்சபையினர் பலரும், குறிப்பாக மெதடிசம் மர்றும் பியிடிரிஸ்டுகளும் இவர்களை முன் உதாரணமாகக் கருதினர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Chryssavgis 2008, p. 15.
  2. Chryssavgis 2008, pp. 7–9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவனத்_தந்தையர்கள்&oldid=1618396" இலிருந்து மீள்விக்கப்பட்டது