பாலை பூங்கா
பாலை பூங்கா (Palai Park) என்பது தமிழ்நாட்டின் நிறுவப்பட்டுள்ள இரண்டு மரபியல் மரபுத் தோட்டங்களில் ஒன்றாகும் (அச்சாடிபரம்பு, இராமநாதபுரம் மற்றும் குறிஞ்சி பூங்கா, ஏற்காடு, சேலம்). இந்த பூங்கா தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் துறையால் பராமரிக்கப்படுகிறது. பழங்கால சங்க இலக்கியங்களில் வறண்ட சுற்றுச்சூழல் மண்டலத்தைக் குறிக்கும் ஐந்து நிலப்பரப்புகளில் ஒன்றான பாலை நிலப்பரப்பின்[2] பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை மூலம் உருவாக்கப்பட்ட இந்த தோட்டம், அப்போதைய முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.[3]
பாலை பூங்கா Palai park | |
---|---|
பாலை மரபுத் தோட்டம் | |
நுழைவாயில் | |
வகை | சுற்றுச்சூழல் பூங்கா |
அமைவிடம் | இராமநாதபுரம் |
அண்மைய நகரம் | கீழக்கரை |
ஆள்கூறு | 9°18′49″N 78°49′51″E / 9.31367000°N 78.83080000°E[1] |
பரப்பளவு | 10 எக்டேர்கள் (25 ஏக்கர்கள்) |
திறப்பு | சூன் 2015 |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
முக்கிய அம்சங்கள்
தொகுபாலை மரபியல் மரபுத் தோட்டத்தில் உள்ள சில முக்கிய அம்சங்கள்: புல்வெளிகள், மணல் திட்டுகள், சிறிய குளம், சோலை, நாற்றங்கால் பகுதி, குழந்தைகளுக்கான பூங்கா பகுதி, மேடைப் பகுதி, குடில் மற்றும் உணவுச் சாலை.[2]
படங்கள்
தொகு-
நுழைவாயில்
-
நடைபாதை
-
பாலைவனச் சோலை
-
குழந்தைகள் விளையாட்டுப் பகுதி
-
குடில்
-
குழந்தைகள் விளையாட்டுப் பகுதி
-
பாலைவனச்சோலை மாலைக் காட்சி
-
குளம்
-
அலுவலகக் கட்டடம்
-
நாற்றங்கால் விற்பனை மையம்
மேற்கோள்கள்
தொகு- ↑ வார்ப்புரு:Google maps
- ↑ 2.0 2.1 "Horticulture" (in அமெரிக்க ஆங்கிலம்). Ramanathapuram District, Tamil Nadu, India. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
- ↑ Special Correspondent (2015-06-18). "Ramanathapuram gets Genetic Heritage Garden" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/ramanathapuram-gets-genetic-heritage-garden/article7327537.ece.