பால்கன் மலைகள்
பால்கான் மலைத் தொடர்கள், (பல்கேரிய மற்றும் செர்பிய மொழிகளில் ஸ்ட்ரா ப்ளனியா, பழைய மலை) [1]ஐரோப்பாவின் கிழக்கு பகுதியில் உள்ள பால்கன் தீபகற்பத்தில் காணப்படும் மலைத் தொடராகும். இந்த பால்கான் மலைத் தொடரானது பல்கேரியா மற்றும் செர்பியா எல்லையில் உள்ள வ்ரஷ்கா சுகா மலை உச்சியிலிருந்து 557 கி.மீ தொலைவில் கிழக்கு நோக்கி மத்திய பல்கேரியா வழியாக எமைன் முனை மற்றும் கருங்கடல் வரை செல்கிறது. இம்மலைத் தொடரின் அதி உயர சிகரம் மத்திய பல்கேரியாவில் உள்ளது. மிக உயர சிகரத்தின் உயரம் 2,376 மீட்டர் ஆகும். ரிலா மற்றும் பிரினிக்கு அடுத்ததாக இது இந்த நாட்டில் உள்ள மூன்றாவது உயரமான சிகரமாகும். இந்த மலைகளின் மூலமே பல்கேரிய தீபகற்பம் தன் பெயரைப் பெற்றது.
பால்கன் மலைகள் | |
---|---|
பழைய மலை | |
A view from Kom Peak in western Bulgaria. | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | Botev Peak |
உயரம் | 2,376 m (7,795 அடி) |
ஆள்கூறு | 42°43′00″N 24°55′04″E / 42.71667°N 24.91778°E |
பரிமாணங்கள் | |
நீளம் | 557 km (346 mi) west-east |
அகலம் | 15–50 km (9.3–31.1 mi) north-south |
பரப்பளவு | 11,596 km2 (4,477 sq mi) |
புவியியல் | |
நாடுகள் | பல்கேரியா and செர்பியா |
தொடர் ஆள்கூறு | 43°15′N 25°0′E / 43.250°N 25.000°E |
நிலவியல் | |
பாறை வகை | granite, gneiss, limestone |
இந்த மலைத் தொடரானது கருங்கடலுக்கும் ஏஜியன் கடலுக்கும் இடையில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் மேற்கு பகுதி தவிர்த்து வடிகால் நீர் பரப்பை உருவாக்குகின்றன. மேற்கு பகுதியில் கண்ணைக் கவர்கின்ற இஸ்கார் மலை இடுக்கு அல்லது ஆழ் பள்ளதாக்கு உள்ளது. இங்குள்ள சுண்ணக்கரடு தணிவானது மகுரா குகையையும் சேர்த்து அதிக அளவு குகைகள் உடையது இவற்றில் மிகவும் முக்கிய மற்றும் விரிவாக்கப் பட்ட ஐரோப்பிய பழைய கற்கால குகை ஓவியங்கள் ஆகிய லெடெனிகா, சேவா, டுப்கா, பச்சோ கிரோ ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவற்றில் அதிகம் குறிப்பிடத் தக்கது மேற்கில் உள்ள பெலோகிரட்சிக் பாறைகள் ஆகும்
முக்கியமான பாதுகாக்கப் பட்ட பகுதிகள் அதிகம் உண்டு அவையாவன: மத்திய பால்கன் தேசிய பூங்கா, வ்ராசன்ஸ்கி பால்கன் இயற்கை பூங்கா, பல்கார்கா இயற்கை பூங்கா மற்றும் ஸினைட் கமானி இயற்கை பூங்கா அதோடு கூட அதிகமான இயற்கை சரணாலயங்களும் உள்ளன. பால்கன் மலைகளானது அவற்றின் தாவர வகைகள் மற்றும் விலங்கினங்களுக்கு பெயர் போனது. ஆல்ப்ஸ் மலைகளில் பாறைப் பாங்கான இடங்களில் வளரும் வெள்ளை மலர் கொண்ட செடியான எடல்வெய்ஸ் இங்குள்ள கோஸியற்றா ஸ்டெனா பகுதியில் வளருகிறது.
இங்கு காணப்படும் கண்ணையும் கருத்தையும் கவரும் சில நிலப்பகுதிகளாவன செங்குத்தான மலைப் பாறைகளைக் கொண்ட மத்திய பால்கான் தேசிய பூங்கா, மிக உயரமான நீர்வீழ்ச்சி கொண்ட பால்கான் தீபகற்பம் மற்றும் செழிப்பான தாவர வளர்ச்சி காணப்படுகின்றன. இங்கு முக்கியமான இயற்கை சரணாலயங்களான சுப்ரீன், கோஸியற்றா ஸ்டெனா மற்றும் வேறு பல சரணாலயங்களும் காணப் படுகின்றன. ஐரோப்பாவின் மிகப் பெரிய பாலூட்டிகள் இந்த பகுதியை தம் இருப்பிடமாகக் கொண்டுள்ளன. பழுப்பு நிறக் கரடி, ஓநாய், போவார், ஆட்டின் இயல்பு கொண்ட ஐரோப்பிய வரைமான் மற்றும் மான் ஆகியவை இவற்றுள் அடங்கும். பொருளடக்கம்
சொல்பிறப்பியல்/வரலாறு
தொகுஇந்த பெயரானது பல்கர்களால் ஏழாம் நூற்றாண்டில் இங்கு கொண்டு வரப்பட்டு முதல் பல்கேரிய பேரரசு என்பதால் இந்த இடத்திற்கு அந்த பெயர் இடப்பட்டது என்று நம்பப் படுகிறது. பல்கேரிய மொழியில் பால்கான் என்றால் ’மலைகள்’ என்று பொருள்படும்[2]. இது பெர்சிய மொழியிலிருந்து பெறப்பட்டிருக்கலாம். இம்மொழியில் பால்கானே அல்லது பால்கானா என்றால் “உயரமாக, மேலே அல்லது பெருமையான வீடு” என்று அர்த்தம் கொள்வதாகும். மத்திய ஆசியாவில் பால்கான் டாக்லேரி(பால்கான் மலைகள்) மற்றும் பால்கான் மாகாணத்தில் உள்ள டர்க்மெனிஸ்றான் போன்ற இடங்கள் என்ற பெயராலே இன்னும் அறியப் படுகிறது. துருக்கிய மொழியில் பால்கான் என்றால் ”மரங்களுள்ள மலைத் தொடர்[3][4] என்று அர்த்தமாகும்.
மிகப் பழைய காலம் மற்றும் மத்திய காலங்களில் மலைகளானது அவைகளின் ’தராஸிய’ மொழியில் உள்ள ‘ஹேமஸ் மான்ஸ்’ என்ற பெயரால் அறியப் பட்டது. அறிஞர்கள் ஹேமஸ் எனும் வார்த்தை ஸைமான் எனும் பழங்கால வழக்கத்தில் இல்லாமல் ஒழிந்து போன தென் கிழக்கு ஐரோப்பாவில் காணப் பட்ட இந்திய – ஐரோப்பிய மொழியான த்ராஸியன் வார்த்தையான *சைமோன் [5]எனும் வார்த்தையிலிருந்து வந்ததாக கருதுகின்றனர். இந்த மலைத் தொடர் கருங்கடலைத் தொடும் இடம் எமைன் முனை ஏமொன் எனும் வார்த்தையில் இருந்து உருவானது. ஒரு நாடோடி சொல் வரலாற்றின் படி ‘ஹேமஸ்’ கிரேக்க வார்த்தையான “இரத்தம்” எனும் அர்த்தம் கொள்ளும் ”ஹைமா” எனும் வார்த்தையில் இருந்து உருவானதாகக் கூறுகிறது. இது கிரேக்க புராணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஸியஸ் மற்றும் ராட்சதன் டைஃபானுக்கும் இடையில் நடந்த போரில் ஸியஸ் டைஃபானை இடியின் மூலம் காயப் படுத்துகிறார் அப்போது டைஃபானின் இரத்தம் அங்குள்ள மலைகளின் மீது விழுகிறது எனவே அந்த மலைகள் இந்த யுத்தத்தின் நினைவாக பெயரிடப் பட்டது என்று கூறப்படுகிறது. [6]
வேறு வேறு கால கட்டங்களில் இந்த மலைகளுக்கு வழங்கப் பட்ட பெயர்களாவன ஏமோன், ஹேமிமோன்ஸ்,ஹெம்,ஈமஸ், ஸ்லவானிக் மடோரினி கோரி மற்றும் துருக்கிய கோட்ஸாபால்கன் என்பவைகள் ஆகும். [7]
புவியியல்
தொகுநிலவியல் படி பால்கான் மலைகள் மடிப்பு மலைகளின் மலைத் தொடராகும், ஐரோப்பா மற்றும் ஆசியாவின் அதிக பகுதிகளில் நீண்டுள்ள ஆல்ப்-இமாலயன் மலைத் தொடரின் ஒரு “இளைய” பகுதியாகும். இது இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்: முக்கிய பால்கான் தொடர் மற்றும் வடக்கில் உள்ள முந்தைய-பால்கான் இது சிறிது டானுபியன் சமவெளியின் உள்ளே நீட்டிக் கொண்டுள்ளது. தெற்கில் இந்த மலைகள் ஒரே வரிசையில் உள்ள பதினொன்று சமவெளிகள் ஆன செர்பியா கிழக்கு மற்றும் பல்கேரியன் எல்லையிலிருந்து கருங்கடல் வரை செல்லும் உப பால்கான் சமவெளிக்கு எல்லையாக உள்ளது. இது பால்கான் மலைகளை விடொஷா மற்றும் ஸ்ரெட்னா கோரா மலைகள் சேர்ந்து ஸ்ரெட்னொகோரி என்று அறியப் படும் மற்ற சங்கிலித் தொடர் மலைகளிலிருந்து பிரிக்கிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Bulgaria. 1986.
- ↑ Андрейчин Л. и др., Български тълковен речник (допълнен и преработен от Д. Попов). Четвърто преработено и допълнено издание.: Издателство "Наука и изкуство". С., 1994
- ↑ "Balkan".. Microsoft Corporation. அணுகப்பட்டது 31 March 2008. பரணிடப்பட்டது 2009-04-12 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "balkan". Büyük Türkçe Sözlük. Türk Dil Kurumu. “Sarp ve ormanlık sıradağ” பரணிடப்பட்டது 2011-08-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Balkan studies. Édition de lA̕cadémie bulgare des sciences. 1986.
- ↑ Apollodorus (1976). Gods and Heroes of the Greeks: The Library of Apollodorus. Univ of Massachusetts Press. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87023-206-1.
- ↑ "SummitPost - Stara Planina (Balkana) -- Climbing, Hiking & Mountaineering". www.summitpost.org. Archived from the original on 6 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-14.