பால்சமீன் கோயில்

பால்சமீன் கோயில் (Temple of Baalshamin) சிரியாவின் பல்மைரா நகரில் அமைந்துள்ள தொன்மையான கோயிலாகும். இது கேனான் தெய்வமான பால்சமீனுக்கு கட்டப்பட்டது. இக்கோயிலின் முதற்கட்ட கட்டமைப்பு கி.மு இரண்டாம் நூற்றாண்டில் துவங்கியுள்ளது.[1] இது மீண்டும் கி.பி 131 இல் புதுப்பிக்கப்பட்டது. கோயிலுக்கு முன்புள்ள பலிபீடம் கி.பி 115 இலேயே உள்ளது.[2] கி.பி ஐந்தாம் நூற்றாண்டுகளில் கிறித்தவம் தழைத்த காலத்தில் இது திருச்சபை பள்ளியாக மாற்றப்பட்டது.[3]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பால்சமீன் கோயில்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
பால்சமீன் கோயில் 2010ஆம் ஆண்டில் கண்டவாறு
The Temple of Baalshamin in 2010

வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iv
உசாத்துணை23
UNESCO regionஅரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1980 (1980) (4வது தொடர்)
ஆபத்தான நிலை2013 முதல் (2015 இல் இசுலாமிய அரசால் அழிக்கப்பட்டது)
பால்சமீன் கோயில் is located in சிரியா
பால்சமீன் கோயில்
Location of பால்சமீன் கோயில் in Syria.

1954–56 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தின் தொல்லியல் அகழ்வாய்வாளர்கள் இதனைக் கண்டறிந்தனர். பல்மைராவில் கண்டறியப்பட்ட தொன்மையான, முழுமையான கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] 1980இல் இக்கட்டிடத்தை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. சிரியாவின் உள்நாட்டுப் போரின் போது இசுலாமிய அரசு இக்கோயிலைத் தரைமட்டமாக்கியது.[4]

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்சமீன்_கோயில்&oldid=3581235" இலிருந்து மீள்விக்கப்பட்டது