பால்தேவ் பிரகாஷ்
இந்திய அரசியல்வாதி
மருத்துவர் பால்தேவ் பிரகாஷ் (Dr. Baldev Prakash) (1922- 1992) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார். அமிருதசரசில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1957–69 மற்றும் 1974-77 ஆகிய காலகட்டங்களில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பால்தேவ் பிரகாஷ் 1964 முதல் 1974 வரை பாரதீய ஜனசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தார். இவர் 1967 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாப் அரசாங்கத்தில் கர்ணம் சிங் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். பால்தேவ் பிரகாஷ் 1992 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் படித்தவராவார்.[1]
பால்தேவ் பிரகாஷ் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | இரகுநந்தன் லால் பாட்டியா |
பின்னவர் | இரகுநந்தன் லால் பாட்டியா |
தொகுதி | அமிருதசரசு மக்களவைத் தொகுதி |
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சர | |
பதவியில் 1967–1967 | |
முன்னையவர் | N/A |
பின்னவர் | N/A |
தொகுதி | அமிருதசரசு கிழக்கு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பில்கா, ஜலந்தர் மாவட்டம் | 3 பெப்ரவரி 1908
இறப்பு | 1992 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதீய ஜனசங்கம் ஜனதா கட்சி |
துணைவர் | கம்லா சாலிவான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members Bioprofile". Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.