பால்நாடு

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு மண்டலம்

பால்நாடு (Palnadu) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு மண்டலமாகும். பிரகாசம் மாவட்டத்தின் ஒரு பகுதி இதனுள் உள்ளடங்கியுள்ளது. குண்டூர் மாவட்டத்தில் குராசாலாவும், பிரகாசம் மாவட்டத்தின் மார்க்காபூரின் வருவாய் பிரிவுகள் வரை பால்நாடு மண்டலம் பரவியுள்ளது.[1]

வரலாறு தொகு

பிரம்மா நாயுடு, நாகம்மா மற்றும் போர்வீரர்களின் தலைமையில் நடைபெற்ற பால்நாடு போரினால் இப்பகுதி குறிப்பிடத்தக்க பகுதியாக கவனிக்கப்படுகிறது.[2]

2020 ஆம் ஆண்டு சனவரியில், ஆந்திர அரசு இந்த பிராந்தியத்தை ஒரு மாவட்டமாக மாற்ற ஒப்புதல் அளித்தது. நரசராவ்பேட்டை மற்றும் குராசலா நகரங்களில் ஒன்று மாவட்ட தலைமையகத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.[3] ஒருவேளை நரசராவ்பேட்டை தலைமையகமாக அறிவிக்கப்பட்டால், புதிய மாவட்டம் நரசராபேட்டை, சிலகலூரிபேட், குராசலா, சத்தனப்பள்ளி, பெடகுராபாடு, மச்செர்லா மற்றும் வினுகொண்டா சட்டமன்ற பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

புவியியல் தொகு

மலைகளும் கற்களும் நிறைந்த பகுதியாக பால்நாடு காணப்படுகிறது. சுண்ணாம்பு மற்றும் கிரானைட் போன்ற கனிமங்களை இப்பகுதியிலுள்ள மலைகளும் கற்களும் கொண்டுள்ளன.[1] குண்டூர் மாவட்டத்தில் உள்ள நரசராவ்பேட்டை பால்நாட்டின் நுழைவாயில்' என்று கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்நாடு&oldid=3380547" இலிருந்து மீள்விக்கப்பட்டது