பால்யகால ஸ்மரணகள்

பால்யகால ஸ்மரணகள் (மலையாளம்: ബാല്യകാല സ്മരണകൾ, "பால்யகால நினைவுகள்") என்பது மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலா தாஸ் எழுதிய சுயவரலாற்றுப் புத்தகமாகும்.[1][2] புன்னயூர்க்குளம் நாலப்பாட்டிலும், கொல்கத்தாவில் லாண்ட் டவுன் ரோட்டிலும் மாதவிக்குட்டி தனது குழந்தைக் கால அனுபவங்களை இப்புத்தகத்தில் பகிர்கிறார். மேலும் அங்கே தான் கண்ட மனிதர்களையும் அனுபவங்களையும் எல்லாம் தனது இளைமைக்கால நினைவுகளாக எழுதியுள்ளார். குழந்தைக் கதாப்பாத்திரத்தின் மூலம் தனது பெண்ணியப் பார்வையை எடுத்து வைக்கிறார். 1987 இல் வெளிவந்த இந்நூல் மாதவிக்குட்டியின் முக்கிய மூன்று நாவலுகளுள் ஒன்றாகும். மேலும் இதிலுள்ள மாதவிக்குட்டியின் கதாபாத்திரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு, கோழிக்கோடு கண்காட்சியிலும் பார்வைக்கு வைக்கப்பட்டன.[3]

பால்யகால ஸ்மரணகள்
அட்டைப்படம்
நூலாசிரியர்கமலா தாஸ்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைஅனுபவங்கள்
வெளியீட்டாளர்டி சி புக்ஸ்
ஆங்கில வெளியீடு
1987[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்யகால_ஸ்மரணகள்&oldid=2753269" இருந்து மீள்விக்கப்பட்டது