கமலா தாஸ்

சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்

கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) ஓர் இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.[1]

கமலா தாஸ்
பிறப்புகமலா சுரயா (பொதுவாக கமலா தாஸ்)
(1934-03-31)மார்ச்சு 31, 1934
புன்னயூர்க்குளம், மலபார் மாவட்டம், மதராஸ் பிரெசிடென்சி, பிரித்தானிய இந்தியா
இறப்புமே 31, 2009(2009-05-31) (அகவை 75)
பூனா, மகாராஷ்டிரா, இந்தியா
புனைபெயர்மாதவிக்குட்டி
தொழில்கவிஞர், சிறுகதை எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
வகைகவிதை, சிறுகதை

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

கமலா தாஸ் 1934 ஆம் ஆண்டு மார்ச்சு 31 அன்று கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' (தற்போது திருச்சூர் மாவட்டம்) என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை வி.எம்.நாயர், மாத்ருபூமி என்ற மலையாள தினசரி செய்திதாள் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றினார். தாயார் நலபாத் பாலாமணி அம்மா புகழ்பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.

திருமணம்

தொகு

கமலா தாஸ் தனது 15வது வயதில் மாதவ் தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எம்.டி.நலபட், சினேன் தாஸ், ஜெயசூர்யா தாஸ் என்ற பிள்ளைகள் உண்டு.[2] இவரது மூத்த மகன் எம்.டி.நலபட் ஓர் எழுத்தளர், பத்திரிகை ஆசிரியர். இவர் கேரள திருவாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி திருவாதிர திருநல் லக்ஷ்மி பாயி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். கமலா தாஸ் கணவர் மாதவ் தாஸ் 1993 ஆம் ஆண்டு இறந்தர்.[3]

இஸ்லாமை ஏற்றுக்கொள்வது

தொகு

கமலா ஓர் பாரம்பரிய இந்து நாயர் குடும்பத்தில் பிறந்தவர்.[4] ஆனால் இவர் 1999 ஆம் ஆண்டு இஸ்லாம் மாதத்திற்கு மாறினார். தனது பெயரை கமலா சுரையா என்று மாற்றிக்கொண்டார்.[4]

அரசியல் பார்வை

தொகு

கமலா அரசியலில் தீவிரமாக செயல்படாதவர். இருந்தும் இவர் அனாதையாக்கப்பட்ட தாய்மார்களின் நலனுக்கும், நாட்டின் மதசார்பற்ற கொள்கையை நிலைத்திட செய்ய லோக் சேவா பார்டி என்ற கட்சியை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[5]

இலக்கிய பங்களிப்பு

தொகு

கமலா பெரும்பாலும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவந்தார். இவரின் முதல் 'கல்கத்தாவில் கோடைகாலம்' 1965 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து 'வம்சத்தவர்' என்ற தொகுப்பு 1967 ஆம் ஆண்டு வெளிவந்தது இது பெண்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றது. மலையாளத்தில் `என் கதா' (My Story) என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இந்த புத்தகம் சுயசரிதையாக கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டது.[6] கமலா கேரள சாகித்ய அகடமியின் துணை தலைவர் பதவி வகித்தார்.[7]

எழுதிய நூல்கள்

தொகு

ஆங்கிலம்

தொகு

நாவல்

தொகு
  • 1976: ஆல்பபெட் ஆஃப் லஸ்ட்

சுயசரிதை

தொகு

1976: என் கதை

தொகு

சிறு கதைகள்

தொகு
  • 1977:ஏ டால் ஃபார் தி சைல்ட் ப்ராஸ்டிடியு
  • 1992: பதமாவதி தி ஹர்லோட் அண்ட் அதர்ஸ் ஸ்டோரி

கவிதை தொகுப்பு

தொகு
  • 1964: தி சைரேன்ஸ்
  • 1965: சம்மர் இன் கல்கட்டா
  • 1967: தி டிசண்டன்ஸ்
  • 1973: தி ஓல்ட் ப்ளேஹவுஸ் அண்ட் அதர்ஸ் போயம்ஸ்
  • 1977: தி ஸ்ட்ரேஞர் டைம்
  • 1979: டுநைட், திஸ் சாவேஜ் ரைட்
  • 1984: கலெக்டட் போயம்ஸ்
  • 1985: தி அண்ணாமலை போயம்ஸ்
  • 1997: ஒஒன்லி தி சோல் நௌஸ் ஹவ் டோ சிங்
  • 1999: மை மதர் அட் சிக்ஸிடி சிக்ஸ்
  • 2001: யா அல்லாஹ்

மலையாளம்

தொகு
  • 1964: பக்ஷியுடைய மனம் (சிறு கதைகள்)
  • 1968: தனுப்பு (சிறு கதை)
  • 1982: என் காத (சுய சரிதை)
  • 1987: பால்யகால ஸ்மரணகள் (குழந்தைக் கால நினைவுகள்)
  • 1989: வருசங்களுக்கு முன்பு (நாவல்)
  • 1990: பலயன் (நாவல்)
  • 1991: நெநெய் பாயசம் (சிறு கதை)
  • 1994: நிர்மாதளம் பூத்தகாலம் (நாவல்)
  • 1996: கடல் மயூரம் (சிறு நாவல்)
  • 1996: ரோகினி (சிறு நாவல்)
  • 1996: அட்டுகட்டில் (சிறு நாவல்)
  • 1998: நஷ்டபட்ட நீலாம்பரி (சிறு நாவல்)
  • 2005:சந்தன மரங்கள் (நாவல்)
  • 2005: வண்டிகலக்கல் (நாவல்)

விருதுகள்

தொகு

கமலா தனது இலக்கிய படைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

மரணம்

தொகு

2003 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று கமலா புனே மருத்துவ மனையில் இறந்தார். அப்போது இவரு வயது 75 ஆகும். இவரது உடல் முழு அரசு மரியாதையோடு முஸ்லிம் வழக்கப்படி திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்யபட்டது.[14][15] இவரை நினைவுக்கொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் இவரது ஓவியத்தை 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று வெளியிட்டது. இயக்குனர் கமல் இயக்கிய அம்மி என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 அன்று வெளியானது. இந்த திரைப்படம் கமலா சுரையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ்". inioru.com. http://inioru.com/பிரபல-மலையாள-எழுத்தாளர்/. பார்த்த நாள்: 3 June 2019. 
  2. "Kamala Das passes away". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
  3. "Kamala Das". www.scotsman.com (in ஆங்கிலம்). Archived from the original on 2019-12-17. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
  4. 4.0 4.1 "Biography of Kamala Das". www.internetpoem.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
  5. "Noted writer Kamala Das Suraiya passes away". Zee News. 31 May 2009. http://zeenews.india.com/news/nation/noted-writer-kamala-das-suraiya-passes-away_535736.html. பார்த்த நாள்: 1 June 2013. 
  6. Shahnaz Habib (18 June 2009). "Obituary: Kamala Das – Indian writer and poet who inspired women struggling to be free of domestic oppression". The Guardian (London). https://www.theguardian.com/world/2009/jun/18/obituary-kamala-das. பார்த்த நாள்: 28 May 2011. 
  7. "Love and longing in Kerala". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2018.
  8. 8.0 8.1 "Literary Awards". kerala.gov.in. கேரள அரசு. Archived from the original on 11 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. Amar Nath Prasad, Rajiv K. Mallik (2007). Indian English Poetry and Fiction: Critical Elucidations. New Delhi: Sarup & Sons. p. 100. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7625-730-3.
  10. "AKADEMI AWARDS (1955-2016)". sahitya-akademi.gov.in. சாகித்திய அகாதமி. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்பிரல் 2018.
  11. "Honorary degree by Calicut University" (PDF). Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 8 April 2013. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  12. Literary Awards – official website of Onformation and Public Relation Department பரணிடப்பட்டது 24 மே 2007 at the வந்தவழி இயந்திரம்
  13. "Writer Kamala Surayiya receives Ezhuthachan prize". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 January 2003. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Writer-Kamala-Surayiya-receives-Ezhuthachan-prize/articleshow/32767867.cms. பார்த்த நாள்: 30 April 2018. 
  14. "Kerala pays tributes to Kamala Surayya". The Hindu (Chennai, India). 1 June 2009 இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105120920/http://www.hindu.com/thehindu/holnus/004200906011831.htm. பார்த்த நாள்: 4 June 2009. 
  15. "Tributes showered on Kamala Suraiya". The Hindu (Chennai, India). 2 June 2009 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107102057/http://www.hindu.com/2009/06/02/stories/2009060253900400.htm. பார்த்த நாள்: 4 June 2009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_தாஸ்&oldid=3935109" இலிருந்து மீள்விக்கப்பட்டது