பால் ஏர்டோசு

பால் ஏர்டோசு (மார்ச்சு 26, 1913 - செப்டம்பர் 20, 1996) வளமிக்க விளைவுகளைத் தந்த விந்தையான தனிப்போக்கு கொண்டிருந்த ஒரு அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர். சேர்வியல், கோலவியல், எண் கோட்பாடு, செவ் பகுவியல், கணக் கோட்பாடு, நிகழ்தகவுக் கோட்பாடு முதலிய கணிதத்துறைகளில் ஐந்நூற்றுக்கும் மிகுதியான கணிதவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றி ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் கூடுதலான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்துள்ளார்.

பால் ஏர்டோசு (Erdős Pál)
Erdos budapest fall 1992.jpg
1992-ல் புடாபெசுட்டில் ஒரு மாணவர் கருத்தரங்கின்போது
பிறப்புமார்ச்சு 26, 1913(1913-03-26)
புடாபெசுட்டு, அங்கேரி
இறப்புசெப்டம்பர் 20, 1996(1996-09-20) (அகவை 83)
வார்சா, போலந்து
வாழிடம்அங்கேரி
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா
இசுரேல், மற்றபடி தொடர்பயணம்
தேசியம்Flag of Hungary.svg அங்கேரி நாட்டவர்
துறைகணிதம்
பணியிடங்கள்Princeton
Purdue
Notre Dame
Then itinerant
கல்வி கற்ற இடங்கள்University of Pázmány Péter
ஆய்வு நெறியாளர்Leopold Fejér
முனைவர் பட்ட 
மாணவர்கள்
Bonifac Donat
Joseph Kruskal
Alexander Soifer
அறியப்படுவதுசேர்வியல்
கோலவியல்
எண் கோட்பாடு
விருதுகள்Wolf Prize (1983/84)
AMS Cole Prize (1951)
குறிப்புகள்

கணித ஆர்வம்தொகு

இவருடைய கணித ஆர்வம் மூன்று வயதிலேயே தெரிந்தது.இவரால் ஒரு மனிதன் வாழ்ந்த விநாடிகளைக் கூடக் கணக்கிட முடிந்தது.இவரது வாழ்வைப்பற்றி இவர் வாழ்நாளிலேயே “N என்ற எண்.பால் எர்டாஸைக் குறித்த ஒரு சித்திரம்” என்ற பெயரில் ஆவணப்படமாக்கப்பட்டது. “எண்கள் அழகானவை.அவை அழகற்றவை எனில் மற்ற எவை அழகு?” என எர்டாஸ் கூறினார்.[1]

  1. பால் எர்டாஸ். Archived from the original on 2017-07-12. https://web.archive.org/web/20170712142137/http://www.textbooksonline.tn.nic.in/Books/Std08/Std08-I-MSSS-TM-1.pdf. பார்த்த நாள்: 2017-06-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_ஏர்டோசு&oldid=3220670" இருந்து மீள்விக்கப்பட்டது