பாவூர் உலியா

பாவூர் உலியா என்பது நேத்ராவதி ஆற்றில் உள்ள ஒரு தீவாகும். 35 வீடுகளைக் கொண்ட இதுமங்களூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஒரு தேவாலயம் மற்றும் முன்னாள் அரசு பள்ளி ஒன்று உள்ளது. வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இதை மே 2017 இல் தென்கன்னட மாவட்டம் ஏற்றுக்கொண்டது. [1] கோடையில், ஒரு தற்காலிக மர பாலம் தீவை ஆற்றங்கரையுடன் இணைக்கிறது. மழைக்காலத்தில், பொதுமக்களை ஒரு பயணிகள் படகு தீவுக்கு அழைத்துச் செல்கிறது. தீவில் தெரு விளக்குகள், கடைகள் அல்லது மருத்துவ வசதிகள் ஏதுமில்லை.

பாவூர் உலியா
பாவூர் உலியாவில் பள்ளி

சொற்பிறப்பு தொகு

உலியா என்றால் "மீதமுள்ள நிலம்" என்று பொருள். [1] நிலவியல் அடிப்படையில் துண்டிக்கப்பட்ட ஓவல் வடிவத்தை ஒத்திருக்கிறது. ஒரு இந்து குடும்பத்தைத் தவிர இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் ரோமன் கத்தோலிக்கர்களாவர். இவர்களின் சொந்த மொழி கொங்கணியாகும். பரங்கிபேட்டையைச் சேர்ந்த கபுச்சின் பாதிரியார்கள் [2] ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நற்கருணை பிரார்த்தனையைக் கொண்டாட இங்கு வருகிறார்கள். தேவாலயத்தின் பெயர் சிசு இயேசு சேப்பல் என்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்ட்டாட்டங்களின் போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார்கள். [3]

வாழ்க்கைக்கான ஆதாரம் தொகு

இங்கு மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் ஆகியவை அடிப்படை வாழ்க்கை ஆதாரங்களாகும். தேங்காய் மரங்கள் மற்றும் மா மற்றும் பலாப்பழம் போன்ற பிற பழ மரங்கள் தீவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது, மணல் சுரங்கத்தால் தீவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சுரங்க நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சி தொகு

 
பாவூர் உலியா பாலம்

2014 சூலை 29 செவ்வாய்க்கிழமை, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கர்நாடகாவின் யு. டி. காதர் கூறுகையில், பாவூர்-உலியா மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றி கர்நாடக மாநில அரசு, நேத்ராவதி முழுவதும் தொங்கும் பாலம் கட்ட அனுமதி அளித்துள்ளது என்றார். [2] இதற்காக ஏற்கனவே ரூ .3 கோடி தொகை வெளியிடப்பட்டுள்ளது. [3] இந்தப் பாலம் தீவை பிரதான நிலத்துடன் இணைக்கிறது

குறிப்புகள் தொகு

  1. "Zilla panchayat to adopt Pavoor-Uliya". 29 July 2014.
  2. Mendonsa, Kevin (23 April 2017). "Engg Students Try to Bridge Pavoor-Uliya Island to Mainland".
  3. "Pavoor Uliya gets hanging bridge". 29 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவூர்_உலியா&oldid=2896724" இலிருந்து மீள்விக்கப்பட்டது