பாவை விளக்கு (சிற்பம்)


பாவை விளக்கு என்பது இந்து சமய கோவில்களில் காணப்படும் ஒரு வகை விளக்காகும். இந்த விளக்கின் வடிவமைப்பானது பொதுவாக பெண்ணின் கைகளில் விளக்கு ஏந்தியதைப் போல அமைந்திருக்கின்றன. அரிதாக சில இடங்களில் ஆண் பாவை விளக்குகளும் உள்ளன. மையிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலின் மூலவர் சந்நிதியில் ஆண் பாவை விளக்கும், அம்மன் சந்நிதியில் பெண் பாவை விளக்கும் உள்ளன. இந்த விளக்குகள் பெரும்பாலும் பஞ்சலோக உலோகங்களால் வார்க்கப்பட்டு செய்யப்படுகின்றன. சில கோயில்களின் தூண்களில், தனி சிற்பமாக என கல்லான ஆனா பாவை விளக்குகளும் உள்ளன.

பாவை விளக்கு சிற்பம்

முல்லைப் பாட்டில் பாவை விளக்கு எரிதல் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. [1]

இந்த பாவை விளக்குகளில் பெண்கள் நின்று கொண்டு விளக்கை பிடித்திருப்பது போலவும், அமர்ந்த நிலையில் விளக்கை பிடித்திருப்பது போலவும், யானை மீது நின்றவாறு விளக்கு பிடித்திருப்பது போன்றும் அமைக்கப்பெறுகின்றன.

சிறப்பான பாவை விளக்குகள் தொகு

 
பாவை விளக்கு

திருவிடைமருதூர் பாவை விளக்கு தொகு

மராட்டிய மன்னர் அமர் சிங் மகன் பிரதாப் சிங் அவர்களுடைய மனைவிகளுள் ஒருத்தியான அம்முனு பாயி திருமண நேர்த்தி கடனாக பாவை விளக்கை வழங்கியுள்ளார். 120 சென்டிமீட்டர் உயரம் (நான்கு அடி) உள்ளதாதவும், 412 சேர் எடை கொண்டதாகவும் இந்த பாவை விளக்கு உள்ளது. இச்சிலையை உருவாக்கியவர் கன்னார அறிய புத்திரபத்தர் என்பவராவார்.‌ இந்த தகவல்கள் சிலையின் அடிப்பகுதியில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04112l3.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவை_விளக்கு_(சிற்பம்)&oldid=3177293" இலிருந்து மீள்விக்கப்பட்டது