பாவ்லோ பான்சேரி

பாவ்லோ பான்சேரி (Paolo Panceri; 1833, மிலன் - 1877, நாபொலி) இத்தாலிய இயற்கை ஆர்வலர் ஆவார். இவர் பான்சாரி பாவியா பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்பு தனது ஆராய்ச்சியை அங்கு தொடங்கினார். 1861ஆம் ஆண்டில் நேபிஸ்சு பல்கலைக்கழக ஒப்பீட்டு உடற்கூறியல் துறையின் தலைவரானார். அவர் அங்குள்ள விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராக பணிபுரிந்தார். இவர் பரிணாமக் கோட்பாடுகளின் உண்மைத் தன்மையில் கவனமாக இருந்தார். நேபிள்சில் உள்ள ஸ்டேசியோன் ஜூலொஜிகா அன்டன் டோன் (தோர்ன் டார்வினியன் கோட்பாட்டாளர்) அமைய அடித்தளமிட்டவர். இவருடைய ஆய்வுகளான கடலில் காணப்படும் முதுகெலும்பற்றவற்றின் உயிரிவளி ஒளிஉமிழ்வு, ஆம்பியாக்சின் ஆய்வுகள் இத்தாலிய ஆய்வுகளை வெளிநாடுகள் உற்றுநோக்கும் வண்ணம் செய்தது. 1874ஆம் ஆண்டில் எகிப்துக்கான பயணத்திற்காகப் பணம் செலுத்துவதற்காகத் தனது புத்தகங்களையும் அறிவியல் ஆவணங்களையும் பிப்லியோடெகா யுனிவர்சிட்டேரியா டி நாப்போலிக்கு விற்றார். இயற்கை அறிவியல் மற்றும் ஒப்பீட்டு உடற்கூறியலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாதிரி நூலகம் அமைக்க இவை முன்மாதிரியாக அமைந்தது. கார்லோ எமெரி, லியோபோல்டோ மேகி மற்றும் அன்டோனியோ டெல்லா வால்லே முதலானோர் பான்சேரியின் மாணவர்களாவர். இவர் தனது 44 வயதில் இறந்தார்.

பாவ்லோ பான்சேரி, புகைப்படம் - டா காசோ 1878 வெளியீடு

பணிகள் தொகு

  • Prelezione al corso di anatomia comparata nella R. Università di Pavia (Milano 1861);
  • Note di Anatomia comparata, raccolte dalle lezioni del prof. Paolo Panceri da Antonio Della Valle (Napoli 1875);
  • Speranze nell’avvenire delle scienze naturali. Discorso inaugurale (Napoli 1875).

மேற்கோள்கள் தொகு

  • A. Borrelli 1991 Paolo Panceri nella Napoli del secondo Ottocento, Fridericiana, 1990–91, n. 2, pp. 93–113
  • A. Borrelli,1992 Due lettere di Paolo Panceri a Luigi Settembrini, «Fridericiana», 1992–93, n. 4, pp. 99–105
  • A. Borrelli, 2000 Paolo Panceri, Anton Dohrn e la fondazione della Stazione Zoologica di Napoli, Giornale critico della filosofia italiana, LXXIX (LXXXI), fasc. II-III, 2000, pp. 431–447
  • P. Battaglini, Storia della zoologia napoletana, (Napoli 2008), pp. 63–66.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவ்லோ_பான்சேரி&oldid=3026923" இலிருந்து மீள்விக்கப்பட்டது