பாஸ்டோன் முற்றுகை

பாஸ்டோன் முற்றுகை (Siege of Bastogne) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது பல்ஜ் சண்டையின் ஒரு பகுதியாகும். இதில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியம் நாட்டின் பாஸ்டோன் நகரைக் கைப்பற்ற முயன்று தோற்றன.

பாஸ்டோன் முற்றுகை
பல்ஜ் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி

முற்றுகையிடப்பட்ட பாஸ்டோன் நகருக்கு வான்குடைகள் மூலம் தளவாடங்கள் அனுப்பப் படுகின்றன
நாள் டிசம்பர் 20–27, 1944
இடம் பாஸ்டோன், பெல்ஜியம்
அமெரிக்க வெற்றி
பிரிவினர்
ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா அந்தோணி மெக்காலிஃப்
ஐக்கிய அமெரிக்கா வில்லியம் ராப்ர்ட்ஸ்
ஐக்கிய அமெரிக்காகிரைடன் ஆப்ராம்ஸ்
நாட்சி ஜெர்மனி ஹாசோ வான் மாண்ட்டூஃபல்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிக் வான் லுட்விட்ஸ்
பலம்
101வது வான்குடை டிவிசன்

10வது கவச டிவிசன்
705வது டாங்கு அழிப்பு பட்டாலியன்
Total: 11,000 வீரர்கள் + 800 அதிகாரிகள்

4 பலப்படுத்தப்பட்ட டிவிசன்கள் (2 கவச டிவிசன்கள் உட்பட)
இழப்புகள்
3,000+ [1] தெரியவில்லை

டிசம்பர் 16, 1944ல் ஐரோப்பாவின் மேற்குப் போர்முனையில் நேசநாட்டுப் படைகளை முறியடிக்க ஜெர்மனி பல்ஜ் தாக்குதலைத் தொடங்கியது. இத்தாக்குதலின் குறிக்கோள் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றுவதாகும். ஆர்டென் காடு வழியாக நடைபெற்ற இத்தாக்குதலின் இலக்குகளின் ஒன்று பாஸ்டோன் நகரை விரைவில் கைப்பற்றுவது. நேசநாட்டுப் படைகள் சுதாரிக்கும் முன் ஆண்ட்வெர்ப் நகரை அடைய நெடுஞ்சாலைகள் வழியாக ஜெர்மானியப் படைகள் பயணிக்க வேண்டும். ஆர்டென் பகுதியிலுள்ள ஏழு முக்கிய சாலைகளும் பாஸ்டோன் நகரில் ஒன்று கூடின. பாஸ்டோன் நகரைக் கட்டுப்படுத்துபவர் எளிதில் ஆண்ட்வெர்ப் நகரை சாலைகள் மூலம் அடைய முடியும். இதனால் பாஸ்டோனை ஜெர்மானியப் படைகள் கைப்பற்ற முயன்றன.

பாஸ்டோன் நகரில் அமெரிக்க 101வது வான்குடை டிவிசன் நிறுத்தப்பட்டிருந்தது. டிசம்பர் 20ம் தேதி ஜெனரல் ஹாஸ்ஸோ வான் மாண்ட்டூஃபல் தலைமையிலான ஜெர்மானிய 5வது பான்சர் ஆர்மி பாஸ்டோன் நகரை அடைந்து முற்றுகையிட்டது. அடுத்த ஒரு வாரம் இரு தரப்பினருக்கும் கடுமையான சண்டை நடந்தது. அமெரிக்கப் படைகள் ஜெர்மானியத் தாக்குதலை சமாளித்து பாஸ்டோன் நகரைப் பாதுகாத்து விட்டன. டிசம்பர் 27ம் தெதி ஜெனரல் ஜார்ஜ் பாட்டனின் 3வது அமெரிக்க ஆர்மி பாஸ்டோன் நகரை அடைந்து ஜெர்மானிய முற்றகையை முறியடித்தது. பாஸ்டோன் நகரைக் கைப்பற்ற இயலாமையால் பல்ஜ் சண்டைக்கான ஜெர்மானியப் போர்த்திட்டம் தோல்வியடைந்தது.

படங்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Marshall, S.L.A. (1988). "Notes". Bastogne: The First Eight Days. U.S. Army in Action Series (Facsimile reprint of 1946 ed.). United States Army Center of Military History. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-11-12. {{cite book}}: Unknown parameter |chapterurl= ignored (help) . 101st Abn Div casualties from 19 Dec 44 to 6 Jan 45 were 341 killed, 1,691 wounded, and 516 missing. CCB 10th Armd Div incurred approximately 500 casualties.

மேற்கோள்கள

தொகு
  • Ambrose, Stephen E. Band of Brothers. New York: Simon & Schuster Paperbacks, 1992.
  • Turow, Scott. Ordinary Heroes. Farrar, Straus and Giroux (October 27, 2005)


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்டோன்_முற்றுகை&oldid=3350296" இலிருந்து மீள்விக்கப்பட்டது