பா. உ. சித்ரா

பா உ சித்ரா ஓட்டப் பந்தைய வீராங்கனை ஆவார்

பாலக்கீழில் உன்னிகிருஷ்ணன் சித்ரா (Palakkeezhil Unnikrishnan Chitra; பிறப்பு:9 சூன் 1995) என்பவர் ஓர் இந்திய நடுத்தரத் தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனை ஆவார். இவர் 1500 மீட்டர் தூர ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சித்ரா 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன் பட்டப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும் இவர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை மற்றும் 2019 தோகா ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

பா. உ. சித்ரா
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்சூன் 9, 1995 (1995-06-09) (அகவை 29)
பிறந்த இடம்பாலக்கோடு, கேரளம், இந்தியா
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)1500 மீட்டர்
3000 மீட்டர்
5000 மீட்டர்
 
பதக்கங்கள்
பெண்கள் ஓட்டப்பந்தயம்
நாடு  இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஜகார்த்தா 1500 மீட்டர்
ஆசிய தடகள போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 துருக்மெனிஸ்தான் 1500 மீட்டர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 புவனேஸ்வர் 1500 மீட்டர்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 தோகா 1500 மீட்டர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சித்ரா கேரளத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களான உன்னிகிருஷ்ணன் மட்றும் வசந்த குமாரி தம்பதியரின் மகளாக 1995ஆம் ஆண்டு சூன் மாதம் 9ஆம் நாள் பிறந்தார்.[1] இவரது பெற்றோறின் நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை ஆன சித்ரா, பாலக்காட்டில் உள்ள முண்டூர் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் செய்தார். மேலும் இவர் இளங்கலை பட்டப் படிப்பு முடித்துள்ளார்.

தடகளம்

தொகு

சித்ரா 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார் மற்றும் 2017 ஆம் ஆண்டு புவனேசுவரில் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். மேலும் இவர் துருக்மெனிஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஐந்தாவது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 4:27.77 நேரத்தில் ஓடி தங்கம் வென்றார். அந்த ஆண்டின் இறுதியில் இலண்டனில் நடக்க இருந்த உலக தடகள சந்திப்பில் இந்தியத் தடகள சம்மேளனம் சித்ராவை நிராகரித்ததையடுத்து சர்ச்சை எழுந்தது. ஆசிய போட்டிகளில் தான் வெற்றி பெற்றதால் உலக தடகள போட்டிகளில் பங்கேற்கும் உரிமையை தானாகவே பெற்றதாக இந்திய தடகள சம்மேளனத்துக்கு வழக்கு தொடர்ந்தார். சித்ராவை கலந்துகொள்ள அனுமதிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் சம்மேளனத்துக்கு உத்தரவிட்டது. இருப்பினும் உரிய நேரமின்மை காரணமாக உலக தடகள கூட்டமைப்பு அதை ஏற்க மறுத்தது.[2]

பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் இவர் செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக உத்தரப்பிரதேச மற்றும் கேரள அரசுகள் இவருக்கு டாடா நானோ கார்களை பரிசாக வழங்கியுள்ளன. [3] 2019 ஆம் ஆண்டு கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்ற 23ஆவது ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் 4:14.56 நிமிடங்களில் ஓடி தங்கம் வென்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chitra Palakeezh Unnikrishnan". Asian Games. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
  2. "PU Chitra: IAAF rejects AFI's request to include Chitra for World Championships". Times of India. 30 July 2017. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/iaaf-rejects-afis-request-to-include-chitra-for-world-championships/articleshow/59834891.cms. 
  3. Cyriac, Biju Babu (4 December 2013). "Chitra, the rising star of Kerala". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/racing/top-stories/Chitra-the-rising-star-of-Kerala/articleshow/26833863.cms. 
  4. "தங்கம் வென்றார் சித்ரா:ஆசிய தடகளத்தில் அசத்தல்". தினமலர். 25 April 2019. https://sports.dinamalar.com/2019/04/1556126486/PUChitragivesgoldforIndiainAsianAthletics.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._உ._சித்ரா&oldid=3905020" இலிருந்து மீள்விக்கப்பட்டது