டாடா நானோ
டாட்டா நானோ (Tata Nano) என்பது ஒரு சிறிய அளவிளான தானுந்து வாகனம் ஆகும். இது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்திய சந்தையை முதன்மையாகக் குறி வைத்து உருவாக்கப்பட்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட நான்கு பேர் பயணிக்கக் கூடிய வாகனமாகும். மேலும் இது சிறந்த எரிபொருள் பயனுறுதி உடையது. இதன் வெளியீட்டு விலை 10 ஜனவரி 2008 அன்று ₹ 1,00,000 (அமெரிக்க டாலர் 2,500) என இருந்தது.[4]
Tata - Nano - Kolkata 2011-09-15 5184.JPG | |
உற்பத்தியாளர் | டாட்டா மோட்டார்ஸ் |
---|---|
வேறு பெயர் | Tata GenX Nano (facelift 2015–2018) |
உற்பத்தி | 2008–2018 |
பொருத்துதல் | இந்தியா: குசராத்து, சனந்த் தொழிற்சாலை[1] |
வகுப்பு | நகர வாகனம் |
உடல் வடிவம் | 4-கதவுகள் |
திட்ட அமைப்பு | பின்பக்கம் அமையப்பெற்ற இயந்திரம் |
Platform | டட்டா எக்ஸ்3[2] |
இயந்திரம் | 624 சிசி எரிபொருள் உட்செலுத்தல் தொகுதி [[பெற்றோல் பொறி}பெட்ரோல்]] |
செலுத்தும் சாதனம் | 4-மின்னீர்ம கைமுறை செலுத்தம் வசதி (2015+) |
சில்லு அடிப்பாகம் | 2,230 mm (87.8 அங்) |
நீளம் | 3,099 mm (122.0 அங்) 3,164 mm (124.6 அங்) (GenX Nano) |
அகலம் | 1,390 mm (54.7 அங்) |
உயரம் | 1,652 mm (65.0 அங்) |
குறட்டுக்கல் எடை | 600–635 kg (1,323–1,400 lb) |
வடிவமைப்பாளர் |
|
டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் 250,000 வாகனம் என்ற உற்பத்தி எண்ணிக்கைய உற்பத்தி செய்யும் என்று கணித்தது. ஆனால் இதை அடைய முடியவில்லை. இதற்கு பல்வேறு காரணிகள் விற்பனை அளவில் சரிவுக்கு வழிவகுத்தன. இதில் தொழிற்சாலையை சிங்கூரிலிருந்து சனந்துக்கு மாற்றும் போது ஏற்பட்ட தாமதங்கள், நானோ தீப்பிடித்த ஆரம்ப நிகழ்வுகள் மற்றும் நானோ பாதுகாப்பற்றது மற்றும் அதன் ஆக்கிரமிப்பு செலவுக் குறைப்பிலிருந்து தரம் இல்லை என்ற கருத்து ஆகியவையும் அடங்கும். 2016-2017 இல் இதன் விற்பனை 7,591 என்ற இலக்கையே எட்டியது. டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரியின் கூற்றும் 2017 டாட்டா மோட்டார்ஸ் நிர்வாகமும் உறுதிப்படுத்தியபடி, இந்த திட்டம் நிதியிழப்பைச் சந்தித்தது.[5]
2017 ஆம் ஆண்டில், டாட்டா மோட்டார்ஸ் இந்த திட்டத்திற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு காரணமாக மீண்டும் உற்பத்யைத் தொடரும் என்று கூறியது.[6][7] ஆனாலும், இறுதியில் 2018 மே மாதம் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சனந்த் தொழிற்சாலை பின்னர் டாட்டா டியாகோ மற்றும் டாட்டா டிகோர் உள்ளிட்ட பிற வாகனங்களையும் உற்பத்தி செய்தது.
வரலாறு
தொகு2005 ஆம் ஆண்டில் டாட்டா ஏஸ் என்ற குறைந்த விலை சரக்கு வாகனத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், டாட்டா மோட்டார்ஸ் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் பல இந்தியர்களை ஈர்க்கும் வகையில் மலிவு விலையில் பயணிகள் வாகனம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியது.[8] அதிக ஆடம்பரம் ஏதுமில்லாத அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் எஃகு அளவைக் குறைப்பதன் மூலமும், குறைந்த ஊதியம் கொண்ட இந்திய தொழிலாளர்களை நம்பியிருப்பதன் மூலமும் இதன் விலை குறைக்கப்பட்டது.
செலவின குறைப்பு அம்சங்கள்
தொகு- நானோவின் கதவு பின்புறம் திறக்காது. அதற்குப் பதிலாக பின்புற இருக்கைகள் மடிக்கப்பட்டு பின்புறம் செல்ல முடியும்.[9][10]
- வழக்கத்திற்கு மாறாக இரு கண்ணாடி துடைப்பான்களுக்குப் பதிலாக ஒன்று மட்டுமே இருக்கும்.[11]
- பவர் ஸ்டீயரிங் கிடையாது.[12]
- அதன் கதவு திறப்பான் எளிமையாக்கப்பட்டது.[13]
- சக்கரங்களில் நான்கு முடுக்கிகளுக்குப் பதிலாக மூன்று மட்டுமே இருக்கும்.[14]
- ஒருபுறம் மட்டுமே பார்க்க பார்வைக் கண்ணாடி பொருத்தப்பட்டது.[15][16] ஒற்றை சமநிலை தண்டு கொண்ட வாகன்த்தில் 2 நீள் உருளை பெட்ரோல் இயந்திரம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று நிறுவனம் கூறியது.
அறிமுகத்தின் போது அதன் குறைந்த விலை ₹ 1 லட்சம் (ரூ. 100,000) என்ற காரணமாக அதிக கவனத்தை ஈர்த்தது.[17] சில ஊடகங்கள் இதனை “மக்களின் வாகனம் ” என்று பெயரிட்டன.[18]
சிங்கூர் தொழிற்சாலை வெளியேற்றம்
தொகுடாட்டா மோட்டார்ஸ் 2006 ஆம் ஆண்டில் நானோ மேற்கு வங்காளத்தின் சிங்கூரில் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்தது.[19] உள்ளூர் விவசாயிகள் புதிய தொழிற்சாலைக்கு தங்கள் நிலத்தை கட்டாயமாக கையகப்படுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கினர்.[19] டாட்டா முதலில் நானோ வெளியீட்டை தாமதப்படுத்தி, பின்னர் அதற்கு பதிலாக வேறு மாநிலமான குசராத்தில் வாகனத்தை உருவாக்க முடிவு செய்தது.[20]
உலகின் மிகவும் மலிவு விலை உற்பத்தி வாகனமாக அறிவிக்கப்பட்ட இது, ₹ 1 லட்சம் (சுமார் 2,000 அமெரிக்க டாலர்) என்ற விலையில் விற்கப்பட்டது.[21] முதல் வாடிக்கையாளர்கள் மட்டுமே அந்த விலையில் காரை வாங்க முடிந்தது. மேலும் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, அடிப்படை நானோவின் விலை சுமார் ₹ 2,15,000 (3,400 அமெரிக்க டாலர்) என்ற அளவில் தொடங்கியது.[22] பொருள் செலவுகள் அதிகரிப்பதே இந்த விரைவான விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம். [23]
வரவேற்பு
தொகுஇரு சக்கர வாகனத்துடன் ஒப்பிடும்போது இது இன்றும் மிகவும் விலை உயர்ந்ததாகவே இருக்கிறது. மேலும் விநியோகத்திற்காக அதிக மாதங்கள் ஆவது ஆகியவை காரணமாக நானோ இந்திய நுகர்வோரிடமிருந்து கலவையான வரவேற்பைப் பெற்றது.[24] இது மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் வாகனம் என்று அடையாளம் காணப்பட்டது. புதியதாக இருக்கும்போது சமூக அந்தஸ்தைக் கொடுத்தது. அதே சமயம் இரண்டாவது நபரிடம் விற்கும்போது இது அதிக செலவு வைக்கும் வாகனமானது. நானோ ஒரு "ஏழை மனிதனின்" வாகனமாகக் கருதப்பட்டதும், சிலரை இதிலிருந்து திருப்பிவிட்டது.[25] தீ மற்றும் பிற பாதுகாப்பு பிரச்சினைகளும் ஒரு கவலையாக இருந்தன.[24]
உற்பத்தி முடிவு
தொகுஇந்த வாகனத்தில் விற்பனை குறைவாக இருந்ததால் (ஜூன் 2017 இல் 275 நானோ வாகனங்களை விற்பனை செய்தபோது, ஜூன் 2018 இல் ஒரே ஒரு நானோ வாகனத்தை விற்பனை செய்தது), டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் நேரடி விற்பனை இல்லாமல் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. நானோ வாகனத்தை வாங்குபவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், விற்பனை எப்போதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது.[26] சனந்த் ஆலை இப்போது டியாகோ மற்றும் டிகோர் போன்ற பிற வாகனங்களை உற்பத்தி செய்கிறது.[27]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Manufacturing: Sanand". Tata Motors. Archived from the original on 20 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2012.
- ↑ "Analysis - Tata Motors' future models under the microscope". Just-Auto.com. 4 August 2017. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
- ↑ Patton, Phil (11 February 2010). "A Tata Nano Takes Manhattan". The New York Times. https://www.nytimes.com/2010/02/14/automobiles/14NANO.html.
- ↑ Chang, Richard S. "Tata Nano: The World's Cheapest Car".
- ↑ "Tata Motors Shuts Down Loss Making Small Car Tata Nano Production". Pixr8. Archived from the original on 19 January 2017.
- ↑ "Tata Motors to continue Tata Nano production for now". Overdrive. 27 September 2017.
- ↑ "Tata Nano sales to continue in spite of no demand". The Hans India. 29 September 2017.
- ↑ "The Next People Car". Forbes. 19 April 2007. https://finance.yahoo.com/news/pf_article_102865.html.
- ↑ ஆட்டோ கார் இந்திய சோதனை ஓட்டம்
- ↑ Steve Cropley. "Tata Nano driven — first drive". Autocar. பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.
2 minutes in video shows trunk space
- ↑ நானோ என்னும் முழுமையானக் கார்
- ↑ "டாடா நானோ- டாடா மோட்டார்ஸ்சின் மக்கள் கார்-அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்". Archived from the original on 2010-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
- ↑ BBCnews.com 2008 01 article on cost-cutting methods
- ↑ Tata Nano - Nano second to none!
- ↑ "Time.com article on Nano". Archived from the original on 2009-05-14. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
- ↑ "Tata Nano – Nano second to none!". Business Standard. 12 April 2009. http://www.bsmotoring.com/storypage.php?autono1002.
- ↑ "Bodacious Tata: India Delivers World's Cheapest Car". Spiegel Online International. 11 January 2008. http://www.spiegel.de/international/world/0,1518,528106,00.html.
- ↑ "Tata Motors unveils the People's Car". Green Car Congress. 2008-01-10. பார்க்கப்பட்ட நாள் 2024-03-04.
- ↑ 19.0 19.1 "Nano wars: Tata threatens to make the world's cheapest car somewhere else". The Economist. 28 August 2008. http://www.economist.com/node/12010079.
- ↑ For initial delay, see Rain, political unrest delay Tatas' dream car Rediff.com, 3 August 2007
- ↑ "Tata Nano Launched in Mumbai". த நியூயார்க் டைம்ஸ். 23 March 2009. http://wheels.blogs.nytimes.com/2009/03/23/tata-nano-launched-in-mumbai/.
- ↑ For only first customers receiving ₹ 100,000, see "Tata Motors to deliver first Nano on Friday". 16 July 2009. https://www.reuters.com/article/tatamotors-nano-idUSBOM1678720090716.
- ↑ 24.0 24.1 "Where Did It All Go Wrong For Tata's Nano?". Pakistan Defence. Archived from the original on 1 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 September 2014.
- ↑ Tavares, Avinash. "Marketing lessons from tata nano". Slideshare. பார்க்கப்பட்ட நாள் 18 September 2014.
- ↑ "RIP Nano. World's Cheapest Car Goes Up in Smoke". Bloomberg.com. 11 July 2018. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
- ↑ "Tata Motors' Sanand facility reaches 100% utilization". 7 August 2018. https://www.tatamotors.com/press/tata-motors-sanand-facility-reaches-100-capacity-utilization-to-meet-growing-demand-for-tiago-and-tigor/.