பிசிபேலே பாத்

பிசிபேலே பாத் (Bisi bele bhath) அல்லது உலியண்ணா என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தோன்றிய ஒரு காரமான, அரிசி சார்ந்த உணவாகும். தமிழ் மொழியில் 'சூடான சாம்பார் சாதம்' என்ற பொருளில் வரும் பிசி பேலே பாத் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். இது மைசூர் அரண்மனையில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மேலும், இது வேலூர் கோட்டை மற்றும் அங்கிருந்து இந்தியாவின் தென் மாநிலங்களில் பரவியதாக கருதப்படுகிறது.

தயாரிப்பு தொகு

 
சூடான பிசிபேலா பாத் ரைத்தா மற்றும் அப்பளத்துடன் பரிமாறப்படுகிறது.

இந்த உணவின் பாரம்பரிய தயாரிப்பு மிகவும் விரிவானது. இந்த உணவை தயாரிப்பதற்கு, காரமான மசாலா கலவை, துவரம் பருப்பு (ஒரு வகை பயறு), அரிசி, நெய் மற்றும் காய்கறிகள் பயன்படுத்தப்படுகிறது. [1] ஜாதிக்காய், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் புளி கூழ் போன்ற மசாலாப் பொருட்கள் இதன் தனித்துவமான மணம் மற்றும் சுவைக்கு பங்களிக்கின்றன. இந்த உணவு தயாரிப்பின் செய்முறையில் அதிக வேறுபாடுகள் காணப்படுகிறது. மேலும், சில செய்முறைகளில் இந்த உணவை தயாரிக்க முப்பது பொருட்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. [2]

இது சூடாக பரிமாறப்படுகிறது. இதன் துணை உணவாக, சட்னி, பூந்தி (இனிப்பு), சாலட், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல்களுடன் பரிமாறப்படுகிறது. இந்த உணவு பொதுவாக உடுப்பி உணவு வகைகளுக்கு சேவை செய்யும் உணவகங்களில் காணப்படுகிறது. இதற்கு பயன்படுத்தப்படும் மசாலா கலவையை சில உணவு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.

சொற்பிறப்பியல் தொகு

பிசி பேலே பாத் என்ற பெயர் ஒரு கன்னடச் சொற்றொடர் ஆகும். இதன் பொருள், தமிழில் "சூடான சாம்பார் சாதம்" எனப்பொருள்படும். கன்னடத்தில், பிசி என்றால் 'சூடான' என்றும் , பேல் என்றால் பயறு என்றும், பாத் என்றால் அரிசியால் செய்யப்பட்ட ஒரு உணவு என்றும் பொருள்படுகிறது.

குறிப்புகள் தொகு

  1. "Rice Bowl: Vegetarian Rice Recipes from India and the World".
  2. Cohen, Margot (October 26, 2007). "The Dish: Bisi Bele Bath". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் January 19, 2017. (subscription required)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசிபேலே_பாத்&oldid=2997856" இலிருந்து மீள்விக்கப்பட்டது