பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரி
பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரி (Bis(trimethylsilyl)mercury) என்பது (CH3)3-Si-Hg-Si-(CH3)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை பிசு(மும்மெத்தில்சிலில்)பாதரசம் என்ற பெயராலும் அழைக்கலாம்.
இனங்காட்டிகள் | |
---|---|
4656-04-6 | |
ChemSpider | 21106419 |
EC number | 236-315-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83317 |
| |
பண்புகள் | |
C6H18HgSi2 | |
வாய்ப்பாட்டு எடை | 346.97 g·mol−1 |
கொதிநிலை | 104 °C (377 K)(dec.) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H300, H310, H330, H373, H400, H410 | |
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு1963 ஆம் ஆண்டு வைபெர்கு மற்றும் குழுவினர் முதன்முதலில் இச்சேர்மத்தை தயாரித்தனர். டிரைமெத்தில்சிலில் புரோமைடுடன் சோடியம் இரசக்கலவையை வினைபுரியச் செய்து இவர்கள் பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரியைத் தயாரித்தனர்[1].
- 2 Na + Hg + TMSBr → TMS2Hg + 2 NaBr
வினைகள்
தொகு100-160 ° செல்சியசு வெப்பநிலைக்கு பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரியை தொடர்ச்சியாக சூடுபடுத்தும்போது அல்லது ஓர் ஈத்தர் கரைசலாக ஒளியில் படநேரும்போது இது எக்சாமெத்தில்டைசிலேனாக சிதைவடைகிறது :[1].
TMS2Hg → (CH3)3Si-Si(CH3)3 + Hg
பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரி சேர்மம் ஐதரசன் குளோரைடுடன் வினைபுரிந்தால் டிரைமெத்தில்சிலேனும் டிரைமெத்தில்சிலில்குளோரைடும் உருவாகின்றன :[1].
TMS2Hg + HCl → TMSH + TMSCl + Hg
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Wiberg, E.; Stecher, O.; Andrascheck, H. J.; Kreuzbichler, L.; Staude, E. (1963). "Recent Developments in the Chemistry of Metal Silyls of the Type M(SiR3)n". Angew. Chem. Int. Ed. Engl. 2 (9): 507. doi:10.1002/anie.196305071.
மேலும் வாசிக்க
தொகு- Pickett, Nl; Just, O; Vanderveer, Dg; Rees Ws, Jr (Apr 2000). "Reinvestigation of bis(trimethylsilyl)mercury". Acta Crystallographica C 56 (4): 412–3. doi:10.1107/S0108270199016339. பப்மெட்:10815189.