பிசு(டிரைமெத்தில்சிலில்) பெராக்சைடு

பிசு(டிரைமெத்தில்சிலில்) பெராக்சைடு (Bis(trimethylsilyl) peroxide) என்பது (CH3)3SiO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிசு(மும்மெத்தில்சிலில்) பெராக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். நிறமற்ற இந்நீர்மம் அமிலக்குழுக்கள் பற்றாக்குறை ஏற்படும்வரையில் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. ஐதரசன் பெராக்சைடுஇணையொத்த புரோட்டான் வழங்காச் சேர்மமாக வர்ணிக்கப்படுகிறது. இதனடிப்படையில் சில கரிம ஆக்சிசனேற்ற வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. கரிம இலித்தியம் சேர்மங்களுடன் சேர்த்து சூடுபடுத்தினால் பிசு(டிரைமெத்தில்சிலில்) பெராக்சைடு சிலில் ஈதர்களைக் கொடுக்கிறது. மும்மெத்தில்சிலில் குளோரைடுடன் ஐதரன் பெராக்சைடு – யூரியா அணைவு போன்ற ஐதரசன் பெராக்சைடின் நீரிலி கூட்டு விளைபொருள்களை சேர்த்து சூடுபடுத்துவதால் பிசு(டிரைமெத்தில்சிலில்) பெராக்சைடு தயாரிக்க இயலும் [1].

பிசு(டிரைமெத்தில்சிலில்) பெராக்சைடு
இனங்காட்டிகள்
5796-98-5
InChI
  • InChI=1S/C6H18O2Si2/c1-9(2,3)7-8-10(4,5)6/h1-6H3
    Key: XPEMYYBBHOILIJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10058088
SMILES
  • C[Si](C)(C)OO[Si](C)(C)C
பண்புகள்
C6H18O2Si2
வாய்ப்பாட்டு எடை 178.38 g·mol−1
தோற்றம் நிறமற்ற எண்ணெய்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "Bis(trimethylsilyl) Peroxide". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. (2002). DOI:10.1002/047084289X.rb219.pub3. 

.