பிசு(முப்புளோரோமெத்தில்) இருசல்பைடு

வேதிச் சேர்மம்

பிசு(முப்புளோரோமெத்தில்) இருசல்பைடு (Bis(trifluoromethyl) disulfide) என்பது C2F6S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். புளோரினேற்றம் அடைந்த கரிமக் கந்தகச் சேர்மமான இது ஒரு புகை நஞ்சாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] திரிஃப்லிக் அமிலம் தயாரிக்கையில் ஓர் இடைநிலையாக இது கிடைக்கிறது. பிசு(முப்புளோரோமெத்தில்) இருசல்பைடு ஆவியாகும் ஒரு திரவமாகும். உள்ளிழுப்பதன் மூலம் மிகவும் நச்சுத்தன்மையை கொடுக்கும். பிசு(டிரைபுளோரோமெத்தில்) டைசல்பைடு என்ற பெயராலும் அறியப்படுகிறது.

பிசு(முப்புளோரோமெத்தில்) இருசல்பைடு
Bis(trifluoromethyl) disulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
அறுபுளோரோயிருமெத்தில் இருசல்பைடு
இனங்காட்டிகள்
372-64-5 Y
ChemSpider 61112
InChI
  • InChI=1S/C2F6S2/c3-1(4,5)9-10-2(6,7)8
    Key: CGMFFOXAQVRUAZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 67795
  • C(F)(F)(F)SSC(F)(F)F
பண்புகள்
C2F6S2
வாய்ப்பாட்டு எடை 202.13 g·mol−1
தோற்றம் நீர்மம்
கொதிநிலை 35 °C (95 °F; 308 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பெர்குளோரோமெத்தில் மெர்காப்டன் அல்லது தயோபாசுச்சீனுடன் சோடியம் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிசு(முப்புளோரோமெத்தில்) இருசல்பைடு உருவாகிறது.[2]

நச்சுத்தன்மை

தொகு

உள்ளிழுப்பதன் மூலம் பிசு(முப்புளோரோமெத்தில்) இருசல்பைடு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இது ஒரு சக்திவாய்ந்த நுரையீரல் முகவர் ஆகும். கடுமையான நுரையீரல் வீக்கத்தை ஏற்படுத்தும்.[3] பெர்புளோரோ ஐசோபியூடீனில் இருக்கும் நச்சில் இது பாதி நச்சுத்தன்மை கொண்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Fumigation with bis(trifluoromethyl) disulfide".
  2. "Reaction of metal fluorides with thiophosgene and perchloromethyl mercaptan".
  3. Nold, J. B.; Petrali, J. P.; Wall, H. G.; Moore, D. H. (1991). "Progressive Pulmonary Pathology of Two Organofluorine Compounds in Rats".
  4. Timperley, Christopher M. (2000). "Highly-toxic fluorine compounds". Fluorine Chemistry at the Millennium. pp. 499–538. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/B978-008043405-6/50040-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080434056.