பிச்சல் பெரி

மத்திய மற்றும் தெற்காசியாவில் பேய் கதை கதாபாத்திரம்

பிச்சல் பெரி (Pichal Peri) அல்லது பிச்சல் பைரி (இந்தி: पिछल पेरी , உருது: پچھل‌ پيری "தலைகீழ்-கால்"), சுரல்/சுழில்/சுடைல் என்றும் அழைக்கப்படுகிறது (இந்தி: चुड़ैल , உருது: چڑیل ) என்பது அசுரன் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினம் ஆகும். இது தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் பேய்க் கதைகளில் பிரபலமாகத் தோன்றும் கதை பாத்திரம் ஆகும். பிச்சல் பெரி பொதுவாக முகத்தை மூடிய நீளமான முடியுடன் மற்றும் பாதங்கள் பின்னோக்கிச் செல்லும் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது.[1]

பின்னணி தொகு

பிச்சல் பெரி இந்தியா மற்றும் பாக்கித்தான் மலைகளில் சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது.[2] இவை எப்போதாவது சில இந்தியக் கிராமங்களுக்குள் நுழைந்தாலும் இவை இமயமலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.[2] பாக்கித்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கிராமப்புற மலைப் பகுதிகளில் பொதுவாகக் காட்சிப் பதிவுகள் உள்ளன. இருப்பினும் பஞ்சாப் மாகாணத்திலும் அவ்வப்போது இவை காணப்பட்டதாகக் காட்சிப் பதிவுகள் உள்ளன. இந்த தகவல்களைக் கூறுபவர்கள் பொதுவாகக் கிராமப்புற பெரியவர்கள் ஆவார்கள். இவர்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கை கொண்டவர்களாக அறியப்படுகின்றனர். இவர்கள் பஞ்சாபில் உள்ளவர்கள். தங்கள் வாழிடப்பகுதியின் வடக்கே உள்ள அண்டை நாடுகளிடமிருந்து புராணத்தின் பாதிப்பு காரணமாக இம்மனோபாபம் உருவாக்கியிருக்கலாம். பிச்சல் பெரியின் பண்புகள் பிராந்தியத்தைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது.[1]

சில பதிப்புகளில், பிச்சல் பெரி இரவில் காடுகளில் தோன்றி தனிமையான ஆண்களைக் குறிவைக்கிறது என்று கூறப்படுகிறது. பெரும்பாலான கதைகள் பாதிக்கப்பட்டவர் தப்பிச் செல்வதாக உள்ளது. ஏனெனில் இவை பொதுவாக முதல் சாட்சி என்று கூறும் நபர்களால் கூறப்படுகின்றன. பிச்சல் பெரி இரண்டு வடிவங்களைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான கதைகளில் இவை ஆண்களைக் கவர்ந்திழுப்பதற்காக அழகான பெண்களாகத் தோன்றி பின்னோக்கிய கால்களால் மட்டுமே வெளிப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், பெண் வடிவம் ஒரு உயரமான பேயாக மாறுவதாகக் கூறப்படுகிறது.[1]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Dark, Lucy (14 June 2020). "The Legend Of Pichal Peri Is Not For The Faint Heart!". Mysteriesrunsolved. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  2. 2.0 2.1 "Pichal Peri". Rediff.com. 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிச்சல்_பெரி&oldid=3651267" இலிருந்து மீள்விக்கப்பட்டது