பிஜாய் குமார் ஹர்ன்காகல்
பிஜாய் குமார் ஹர்ன்காகல் (Bijoy Kumar Hrangkhawl) என்பவர் இந்திய மாநிலமான திரிபுராவில் செயல்பட்டுவரும் அரசியல் கட்சியான திரிபுரா பூர்வகுடி தேசியவாதக் கட்சியின் தலைவராவார். ஹிந்த்காவ்ல் தனது அரசியல் வாழ்க்கையை பழங்குடி-தேசியவாத திரிபுரா உபஜாதி ஜுபா சமிதியின் ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்து தொடங்கினார். பின்னர் இவர் சமிதியின் ஆயுதப்பிரிவான திரிபுரி சேனாவின் தலைவராக ஆனார். 1977 இல் இடது முன்னணியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திரிபுரி சேனா உருவானது, அது இடதுசாரிகளுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது. திரிபுரா சேனா விரைவில் திரிபுரா தேசிய தன்னார்வலர் (திதேத) என உருவானது.
திரிபுராவில் பெரும்பான்மையினராக ஆகிவிட்ட வங்காளிகளை பத்து ஆண்டுகளாக, 1978-1988, திரிபுராவில் இருந்து வன்முறையால் வெளியேற்ற முயன்ற திதேதவானது ஹென்ற்கால்வாலால் வழிநடத்தப்பட்டது. திரிபுராவின் கிராமப்புறப் பகுதிகளில் மேற்கொண்ட இனக்கருவறுப்பு பிரச்சாரத்தினால் திதேத உடனடியாகப் புகழ் பெற்றது. 1983 ஆம் ஆண்டில் அவர் பிரதமர் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் திதேத இன் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்திது:
- உங்கள் இதயத்தை சிந்திக்கவைக்க ஆயுதமேந்திய கிளர்ச்சி அவசியம். 1947 அக்டோபர் 15 க்குப் பிறகு திரிபுராவில் ஊடுருவிய அயல்நாட்டினர் அல்லது இந்தியாவின் பிற பகுதியினர் என அனைவரையும் திரிபுராவைவிட்டு வெளியேற்றவேண்டும் ... எங்கள் கோரிக்கை விடுதலைப்பெற்ற திரிபுரா . [1]
1988 ஆம் ஆண்டு திதேத அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், ஒரு அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது.
பின்னர் திதேத INPT உடன் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Strategy of terror பரணிடப்பட்டது திசம்பர் 24, 2010 at WebCiteWebCiteபரணிடப்பட்டது திசம்பர் 24, 2010 at WebCite