பிட்டொரென்ட்

(பிட்ரொரண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிட்டொரென்ட் (bittorrent) பீர்-பீர் (peer to peer) முறையில் கோப்புக்க்ளைப் பரிமாறும் ஏற்றுக் கொள்ளபபட்ட ஓர் வழிமுறையாகும் இது பிரான் ஹொகீனின் (Bran Cohean) உருவாக்கம் ஆகும். பிட்டொரென்ட் ஆனது விலையுயர்ந்த சேவர்கள் மற்றும் அதிவேக இணைப்பு வசதிகளிற்கான கூடுதற் கட்டணங்களை எதிர்பார்க்காது இம்முறையில் மிகப்பெரும் கோப்புக்களை பரிமாறப் பயன்படுகின்றது. காஷ்லாஜிக்கின் கருத்துப் படி 35% வீதமான நெரிசல்கள் இவ்வகையான கோப்புப் பரிமாற்றத்தினாலேயே ஏற்படுகின்றது.[1][2][3]

பிட்டொரென்ட் மென்பொருளானது பைத்தொன் (Phyton) கணினி நிரலாக்கல் மொழியில் எழுதப்பட்டது. இதன் 4.0 ஆம் பதிப்பிற்கமைய இதன் மூல நிரலானது பிட்ரொரண்ட் திறந்த மூல நிரல் அனுமதி (ஜபர் திறந்த மூலநிரலின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட அனுமதி). இதனுடன் ஒத்தியங்கும் பல கிளையண்டகள் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு இயங்கு தளங்களிற்கும் அமைக்கப்பட்டுள்ளன.

பிட்டொரென்ட் கிளையண்ட்கள் யாவும் பிட்ரொறண்டின் அனுமதிபெற்ற கோப்புப் பரிமாற்றல் முறையை ஆதரிக்கின்றன.

டொரண்ட்ட்களை (ரொரண்ட்களை) உருவாகுதலும் வெளியிடுதலும்

தொகு

கோப்பு ஒன்றினையோ அல்லது பல்வேறு கோபுக்களையோ பரிமாறுவதற்கு முதலில் கிளையண்டானது முதலில் ரொரண்ட் கோப்பொன்றினை உருவாக்குதல் வேண்டும். ஒவ்வொரு ரொரண்டும் மெற்றா தகவலைக் கொண்டிருக்கும். அதில் பகிரப்படும் கோப்புபற்றிய விவரம் மற்றும் முதலாவது நகலைத் தரும் கணினியின் விவரம் ஆகியவற்றை சேகரிக்கும்.

டொரண்ட்டுகளைப் (ரொரண்டைப்) பதிவிறக்கம் செய்து கோப்புக்களைப் பரிமாறுதல்

தொகு

இணைய்த்தளத்தில் இருந்து உலாவியூடாக பதிவிறக்கம் செய்து பின்னர் பிட்டொரெண்ட் (பிட்ரொரண்ட்) வருகையர் (கிளையண்ட், client) மூலம் திறக்கலாம். திறக்கப்பட்டவுடன் பிட்டொரண்ட் (பிட்ரொரண்ட்) கிளையண்ட் ஆனது தொடர்வி (தொடரொட்டி?) (டிராக்கர், tracker) உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

பிட்டொரண்ட்டின் (பிட்ரொரண்டின்) முறையான (உத்தியோகபூர்வப்) பயன்பாடுகள்

தொகு

சொந்தக் கோப்புக்களை பிட்ரொரண்ட் ஊடாக விநியோகிப்போர் கூடிவருகின்றது.

மென்பொருட்கள்

தொகு

அநேகமாக திறந்த மூல மென்பொருட்கள் மற்றும் இலவச மென்பொருட்கள் பிட்டொரண்ட்' (பிட்ரொரண்ட்) ஊடாக விநியோகிக்கப் படுகின்றன. இதனால் இம் மென்பொருட்கள் கிடைகும் சாத்தியக் கூற்றினை அதிகரிப்பதோடு கணினி வன்பொருட்கள் மற்றும் இணைய இணைப்பிற்கான கட்டணங்கள் குறைவடைகின்றன. உதாரணமாக சண் மைக்ரோ சிஸ்டத்தின் ஓப்பன் ஆபீஸ் (ஓப்பிண் ஆபீஸ்), மற்றும் லினக்ஸ் விநியோகங்களான பெடோரா, உபுண்டு மாதிரமன்றி இக் கிளையண்ட்களையும் (வருகையர்களையும்) இதேமுறையில் வழங்கி (விநியோகித்து) வருகின்றனர்.

கணினி விளையாட்டுக்கள்

தொகு

http://www.gameupdates.org சில பிட்ரொரண்ட் முறையில் கிடைக்கின்றது.

திரைப்படங்கள்

தொகு

Warner Brothers Entertainment தமது திரைப்படங்களை பிட்ரொரண்ட் முறையில் விநியோகிக்த் திட்டமிட்டுள்ளனர்.

வெளியிணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cohen, Bram (October 2002). "BitTorrent Protocol 1.0". BitTorrent.org. Archived from the original on 8 February 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2020.
  2. Cohen, Bram (2 சூலை 2001). "BitTorrent – a new P2P app". Yahoo eGroups. Archived from the original on 29 January 2008. பார்க்கப்பட்ட நாள் 15 April 2007.
  3. "What Is BitTorrent and Is It Safe?". www.kaspersky.com (in ஆங்கிலம்). 2023-04-19. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டொரென்ட்&oldid=4100794" இலிருந்து மீள்விக்கப்பட்டது