பிதரஹட்டி ஆலமரம்
பிதரஹட்டி ஆலமரம் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகில் உள்ள ஒரு பெரிய ஆலமரமாகும்.
அமைவிடம்
தொகுஇந்த ஆலமரமானது கெலமங்கலம் நகரில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் பாதையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிதரஹட்டி கிராம்ப் பகுதியில் உள்ளது. இந்த ஆலமரமானது மூன்று ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் 1000க்கும் மேற்பட்ட விழுதுகளுடன் உள்ளது. தமிழ்நாட்டின் அடையாறு ஆலமரத்துக்கு அடுத்து மிகப்பெரிய ஆலமரம் இது என்று இப்பகுதி மக்களால் கூறப்படுகிறது.
தொன்மம்
தொகுகர்நாடகத்தின் மாதேசுவரன் மலைக் கோயிலில் ஆண்டு விழாவின்போது மாதேஸ்வரனின் தங்கையான மாரியம்மனை மூங்கில் பல்லக்கில் சுமந்துவந்து மைசூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஊர்வலமாக எடுத்துவந்து பூசை செய்வது வழக்கம் இருந்து வந்துள்ளது. அதன்படி 500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பிதரஹட்டி கிராமத்துக்கு மாரியம்மனை எடுத்துவந்து, இங்குள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் வைத்து பூசை செய்தனர். பிறகு மாரியம்மனை எடுக்க முயன்றபோது பக்கர்களால் எடுக்க முடியாமல் அதனால் இங்கேயே மாரியம்மனை விட்டுவிட்டனர். பக்தர்கள் இந்த இடத்திலேயே மாரியம்மனுக்கு கோயில் கட்டி பூசித்து வரத்தொடங்கினர். இந்த ஆலமரம் பல விழுதுகளைக் கொண்ட மிகப்பெரிய மரமாக வளர்ந்தது எனப்படுகிறது. [1]
குறிப்புகள்
தொகு- ↑ ஜோதி ரவிகுமார் (மே 17 2019). "கெலமங்கலம் அருகே 3 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ஆலமரம். சுற்றுலா தலமாக மாற்ற கோரிக்கை". இந்து தமிழ்.