அடையாறு ஆலமரம்
அடையாறு ஆலமரம் (ஆங்கிலம்:Adayar Banyan Tree) என அழைக்கப்படுவது சென்னை அடையாரில் அமைந்துள்ள ஆலமரம் ஆகும். இது சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.[1]
அடையாரில் இருந்து பெசன்ட் நகர் போகும் வழியில் மற்றும் திரு. வி. க. பாலத்திற்கு அருகே இம்மரம் அமைந்துள்ளது. இம்மரம் அடையார் தியோசபிகல் சொசைட்டியின் வளாகத்தினுள் உள்ள தோட்டத்தினுள் அமைந்துள்ளது. இம்மரத்தின் விழுதுகள் சுமார் 63 ஆயிரம் சதுர அடி அளவில் பரந்து விரிந்துள்ளது. இம்மரத்தின் மொத்தப் பரப்பளவு 59,500 சதுர அடி.
1989 ஆம் வருடத்தின் புயல் காற்றில் பாதிக்கப்பட்ட போதும் இம்மரம் அதியத்தக்க விதத்தில் அழிபடாமல் தப்பியது.
பார்வை நேரம்
தொகுமேலும் இயற்கை எழில்மிகு வகையில் அமைந்துள்ள மரம், செடி, கொடி வகைகளையும், பறவைகளையும் காலை 8.30 மணி முதல் பத்து மணி வரையிலும், மதியம் இரண்டு மணி முதல் நான்கு மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Banyan Tree". www.ts-adyar.org. பார்க்கப்பட்ட நாள் 2022-09-21.
வெளி இணைப்புக்கள்
தொகு