பித்தினியா

பண்டைய அனதோலியாவின் ஒரு பகுதி

பித்தினியா ( Bithynia ) என்பது பண்டைய அனத்தோலியாவில் (இன்றைய துருக்கி ) வடமேற்கில் இருந்த ஒரு பண்டைய பகுதியாகும். உரோமானிய மாகாணமான, இது மர்மரா கடல், பொசுபோரசு மற்றும் கருங்கடலை ஒட்டி அமைந்திருந்தது. இது தென்மேற்கில் மைசியாவையும், பான்டசு கடற்கரையில் வடகிழக்கில் பாப்லகோனியாவையும், தென்கிழக்கில் பிரிசியாவையும் எல்லையாகக் கொண்டிருந்தது.

பித்தினியா
பண்டைய அனத்தோலியாவின் ஒரு நிலப்பரப்பு
Roman Empire - Bythinia et Pontus (125 AD).svgபான்டசு, 125 கி.பி
அமைவிடம்வடக்கு அனத்தோலியா, துருக்கி
மாநிலம் இருந்தது297–74 கி.மு
நாடுகள்கிரேக்கி, பித்தினி, தைனி
வரலாற்று நகரங்கள்நிகோமீடியா, நைசியா , இசுமித்
உரோம மாகாணம்பித்தினியா
அனத்தோலியாவில் பித்தினியாவின் அமைவிடம்
]

பித்தினியா கிமு 4 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு சுதந்திர இராச்சியமாக இருந்தது. அதன் தலைநகரான நிகோமீடியா , பித்தினியாவின் முதலாம் நிகோமெசு என்பவரால் கிமு 264 இல் பண்டைய அசுடாகசு என்ற இடத்தில் நிறுவப்பட்டது. பித்தினியா கிமு 74 இல் உரோமானியக் குடியரசின் கீழ் சென்றது. மேலும் பித்தினியா மற்றும் பான்டசு மாகாணமாக பான்டசு பிராந்தியத்துடன் இணைக்கப்பட்டது. 7-ஆம் நூற்றாண்டில் இது பைசாந்தியத்தின் ஒப்சிகியோன் தீம் என்ற பகுதியுடன் இணைக்கப்பட்டது. இது 13 ஆம் நூற்றாண்டில் செல்யூக் பேரரசின் எல்லைப் பகுதியாக மாறியது. இறுதியில் 1325 மற்றும் 1333 க்கு இடையில் உதுமானியத் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்டது.

குறிப்பிடத்தக்கவர்கள்தொகு

சான்றுகள்தொகு

மேலும் படிக்கதொகு

Hellenistic
Roman
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்தினியா&oldid=3597330" இருந்து மீள்விக்கப்பட்டது