பித்யா சிங் எங்லெங்கு

இந்திய அரசியல்வாதி

பித்யா சிங் எங்லெங்கு (Bidya Sing Engleng) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] அசாம் சட்டமன்றத்தில் திபு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடன் இணைந்த வேட்பாளராக 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ஒரு பகுதியாகவும், 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகவும் இதே தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

பித்யா சிங் எங்லெங்கு
Bidya Sing Engleng
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மே 2021
முன்னையவர்சும் ரோங்காங்கு
தொகுதிதிபு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
வாழிடம்(s)கர்பி ஆங்கலாங்கு மாவட்டம், அசாம்
தொழில்அரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Bidya Sing Engleng Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 18 July 2021.
  2. "Bidya Sing Engleng is a Bharatiya Janata Party candidate Diphu". News18. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.
  3. "Assam Assembly Election Candidate Bidya Sing Engleng". NDTV. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.
  4. "DIPHU (ST) ASSEMBLY CONSTITUENCY". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.
  5. "Bidya Sing Engleng Assam Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 19 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்யா_சிங்_எங்லெங்கு&oldid=3946873" இலிருந்து மீள்விக்கப்பட்டது