பிந்து பணிக்கர்
இந்திய நடிகை
பிந்து பணிக்கர் என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 140 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [1] மலையாள திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார். வாத்சல்யம், சூத்ரதரன், ஜோக்கர் ஆகியவை இவர் நடித்த முக்கிய திரைப்படங்களாகும். பிந்து சிறந்த துணை நடிகைக்கான நான்காவது லக்ஸ்-ஏசியானெட் விருது வென்றவர். பிந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
பிந்து பணிக்கர் | |
---|---|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது |
வாழ்க்கைத் துணை | பிஜூ வி. நாயர் (1998–2003) சாய்குமார் (2009-present) |
பிள்ளைகள் | கல்யாணி பி. நாயர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுபிந்து முதன்முதலில் பிஜு நாயரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு கல்யாணி என்ற மகள் பிறந்தாள். பிஜு நாயர் இறந்த பின்னர் நடிகர் சாய் குமாரை 2009 இல் திருமணம் செய்து கொண்டார்.
விருதுகள்
தொகு- 2001 - கேரள மாநில திரைப்பட விருதுகள் : இரண்டாவது சிறந்த நடிகை - சூத்ரதரன்
- 2001 - துணை நடிகைக்கான ஆசியநெட் திரைப்பட விருது - நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக
- 2013 - டி.டி.கே பிரெஸ்டீஜ்-வனிதா திரைப்பட விருதுகள் - சிறந்த துணை நடிகை - புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் [2]
- 2014– சிறந்த துணை நடிகைக்கான 61 வது பிலிம்பேர் விருதுகள் - புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.
- 2014-நிலுவையில்- துணை நடிகையாக புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான 3 வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்.
தொலைக்காட்சி
தொகு- 1995: மொஹரவம் (தூர்தர்ஷன்)
- 2005: சஹதர்மினி (ஏசியானெட்)
- எல்லாம் மாயாஜலம் (ஆசியநெட்)
- சந்தனகோபாலம் (ஆசியநெட்)
ஆதாரங்கள்
தொகு- ↑ Retrieved 26 November 2013.
- ↑ "TTK Prestige-Vanitha Film Awards: Shobhana, Prithviraj win best actor, actress awards". 20 January 2013. Archived from the original on 7 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)