பினாகா
பினாகா என்பது இந்திய பீரங்கிப்படை உபயோகிக்கும் பல குழல் உந்துகணை செலுத்தி. பினாகா என்றால் சிவனின் சூலம் என பொருள்படும். இதன் உந்துகணை மூலம் 44 நொடிகளில் 3.9 சதுர கிலோமீட்டர்கள் செயலிலக்க செய்ய முடியும். கார்கில் யுத்தத்தில் மலைகளில் பதுங்கியிருந்த எதிரிகளின் இராணுவ தளங்களை அழிக்க இந்தியாவால் இது உபயோகிக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியாவால் இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பினாகா | |
---|---|
பினாகா ஊர்தி | |
வகை | பல குழல் உந்துகணை செலுத்தி |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | இந்தியத் தரைப்படை |
போர்கள் | கார்கில் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு |
வடிவமைப்பு | 1986 |
தயாரிப்பாளர் | லார்சன் அன்ட் டூப்ரோ டாட்டா குழுமம் |
ஓரலகுக்கான செலவு | $ 0.58 மில்லியன் [1] |
உருவாக்கியது | 1998[2] - தற்போது |
எண்ணிக்கை | 80 |
மாற்று வடிவம் | 40 km (25 mi) 120 km (75 mi) (மேம்பாட்டில் உள்ளது) |
அளவீடுகள் | |
சுடுகுழல் அளவு | 214மிமீ (8.4அங்குலம்) |
சுடுகுழல்கள் | 12 |
சுடு விகிதம் | 12 உந்துகணை/44 விநாடி |
அதிகபட்ச வரம்பு | 40 km (25 mi) |
போர்க்கலன் எடை | 250கி (550பவு) |
இயந்திரம் | டீசல் |
வேகம் | 80 கிமீ/நே |
வரலாறு
தொகு- முதலில் இந்தியா ருசியாவின் பி.எம்.21 உந்துகணை செலுத்திகளையே பயன்படுத்தியது.
- 1981ல் பாதுகாப்பமைச்சகம் தொலைதூர உந்துகணை செலுத்திகளை உருவாக்கும் பொறுப்பினை எடுத்துக்கொண்டது.
- 1986ல் பூனே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ரூ.26.47 கோடியில் இத்திட்டத்தினை தொடங்கி 1992ல் முடிக்கப்பட்டது.[3]
செயல்முறை சிறப்புகள்
தொகு- பினாகாவின் ஒரு மின்கலத்தில் 72 உந்துகணைகளை (6 வண்டிகள் * 12 ஏவுகணை) வைக்கலாம்.
- 72 உந்துகணைகளை 44 நொடிகளில் ஏவலாம்.
- மின்கலத்திலிருந்து வண்டிகளை 1 ச.கி.மீ. அளவு வரை எங்கு வேண்டுமானாலும் செயல்படுத்தலாம்.
- ஓரே நேரத்தில் பல திசைகளில் உந்துகணைகளை செலுத்தலாம்.[4]
- கீழ்கண்ட 4 முறைகளில் செயல்படுத்தலாம்.[5](flexible modes of operation)
- தானியங்கி
- பகுதிதானியங்கி
- தொலைதூரத்தில் இருந்து இயக்கலாம்.
- மனிதமுயற்சி
சிறப்பியல்புகள்
தொகு- இரவிலும் தொலைநோக்க மற்றும் செயல்பட உதவும் கருவி.
- எதிரிகளின் படைத்தளம், பீரங்கிகள், கவச வாகனங்கள், ஏவுதளங்கள், கதிரலை கண்காணிப்பு கூடங்கள், கண்ணிவெடி தளங்கள் போன்றவற்றை தகர்க்க வல்லது.
- மேம்படுத்தப்பட்ட செயல்வேகம்.
- கவச வாகனம்.
- நுண்செயலிகளால் செயல்பட வல்லது.
மேற்கோள்
தொகு- ↑ "India developed and successfully tested cheapest indigenously developed multi-barrel Pinaka rocket launcher". Archived from the original on 2007-08-21. பார்க்கப்பட்ட நாள் 2011-08-13.
- ↑ Pinaka Multibarrel Rocket Launcher - FAS.org
- ↑ Pinaka MBRL on GlobalSecurity.org
- ↑ Subramanian, T (2009-10-15). "Bang on target". Frontline Magazine (தி இந்து). பார்க்கப்பட்ட நாள் 2011-05-29.
- ↑ "Pinaka MRLS at Indian-Military.org". Archived from the original on 2012-08-02. பார்க்கப்பட்ட நாள் 2011-08-13.
வெளி இணைப்புகள்
தொகு- Pinaka MRLS Indian Military.org பரணிடப்பட்டது 2012-08-02 at Archive.today
- Pinaka - Bharat Rakshak பரணிடப்பட்டது 2009-02-10 at the வந்தவழி இயந்திரம் Updated: April 2, 2006
- Pinaka MBRL (PDF)[தொடர்பிழந்த இணைப்பு], DRDO Technology Focus, December 2006 .
- Pinaka: First private product ready to fire
- Tata, L&T bag orders for Pinaka rocket launcher
- Gallery of Pinaka prototypes and technical details at Acig.org
- BEML bags big defence vehicle deal
- Rediff news article on Pinaka test
- Dated article on the Pinaka
- Tata Power SED Weapon Systems பரணிடப்பட்டது 2013-11-28 at the வந்தவழி இயந்திரம்