பினாங்கு வெறுங்கல்லறை

பினாங்கு வெறுங்கல்லறை (மலாய்: Tugu Cenotaph Pulau Pinang; ஆங்கிலம்: Cenotaph Penang) என்பது மலேசியா பினாங்கு, ஜோர்ஜ் டவுன் மாநகரில் உள்ள பினாங்கு எஸ்பிளனேட் கடற்கரை நகரச் சதுக்கத்தில் அமைந்துள்ள ஒரு வெறுங்கல்லறை (Cenotaph) ஆகும்.[1]

பினாங்கு வெறுங்கல்லறை
Cenotaph Penang
Tugu Cenotaph Pulau Pinang
ஜார்ஜ் டவுன், பினாங்கு
பினாங்கு வெறுங்கல்லறை
முதலாம் உலகப் போர்
இரண்டாம் உலகப் போர்
மலாயா அவசரகாலம்
இந்தோனேசியா - மலேசியா மோதல்
காமன்வெல்த் போர் வீரர்கள்
சயாம் மரண இரயில்பாதை
(போர் வீரர்கள் நினைவுச் சின்னம்)
திறப்பு1929
1948 (மறுகட்டமைப்பு)
அமைவிடம்5°25′21″N 100°20′30″E / 5.42247°N 100.34178°E / 5.42247; 100.34178
ஜோர்ஜ் டவுன் அருகில்
வடிவமைப்புசுவான் & மெக்லாரன் கட்டிட கலைஞர்கள்; சார்லஸ் ஜெப்ரி பவுட்சர்

இந்த நினைவுச் சின்னத்தின் தளம், தற்போது துன் சையத் சா பராக்பா சாலையில் (Jalan Tun Syed Sheh Barakbah), பினாங்கு எஸ்பிளனேட் அமைந்துள்ள கடற்கரையில் அமைந்துள்ளது.[2]

தற்போதைய கல்லறையானது 1929-இல் கட்டப்பட்ட அசல் கல்லறையின் 1948-ஆம் ஆண்டு புனரமைப்பு ஆகும்.

பொது

தொகு

1929-ஆம் ஆண்டில், சுவான் & மெக்லாரன் எனும் கட்டிடக்கலை நிறுவனத்தால், இந்தக் கல்லறை வடிவமைக்கப்பட்டு நீரிணை டாலர் $ 12,000 செலவில் கட்டப்பட்டது. அசல் கல்லறையானது முதலாம் உலகப் போரில் பினாங்கில் உயிர் இழந்த நேச நாட்டுப் படைவீரர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்கள் மலாயாவை ஆக்கிரமித்தபோதும்; ​​1944, 1945-ஆம் ஆண்டுகளில் பினாங்கில் நேச நாடுகளின் குண்டுவீச்சுகளின் போதும் (Bombing of South-East Asia (1944–1945); இந்தக் கல்லறை சேதம் அடைந்தது.

புனரமைப்பு

தொகு

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் நீரிணை டாலர் $ 3, 500 செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் (சயாம் மரண இரயில்பாதையில் பணிபுரிந்த போர்க் கைதிகள் உட்பட), மலாயா அவசரகாலம், அதைத் தொடர்ந்து நடந்த மறு கிளர்ச்சிகள், மற்றும் இந்தோனேசியா - மலேசியா மோதல் ஆகியவற்றில் உயிர் நீத்த போர் வீரர்களுக்காக ஒரு சிறிய வெறுங்கல்லறையும், இந்தக் கலறையில் கட்டப்பட்டு உள்ளது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "The cenotaph was unveiled by the Prince of Wales on March 31, 1922 at the Esplanade seafront where some World War I battles were fought and where many sailors lost their lives". Penang Global Tourism. பார்க்கப்பட்ட நாள் 8 October 2024.
  2. "The Cenotaph War Memorial - Standing proudly at Esplanade, on the intersection of Jalan Tun Syed Sheh Barakbah and Jalan Padang Kota Lama, it cuts an imposing and evocative image, one that speaks volumes about its past". SmartGuide (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 October 2024.
  3. C, Will (27 October 2023). "The Penang Veterans Association also built another small monument besides the cenotaph to remember those killed in World War II, Siam-Burma Death Railway, Malayan Emergency, Indonesian Confrontation and the Reinsurgency period". Travel 2 Penang. பார்க்கப்பட்ட நாள் 8 October 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_வெறுங்கல்லறை&oldid=4108648" இலிருந்து மீள்விக்கப்பட்டது