பினா ஷா

பாக்கித்தான் எழுத்தாளர்

பினா ஷா (Bina Shah)ஒரு பாகிஸ்தான் எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் கராச்சியில் வசிக்கும் வலைப்பதிவர் ஆவார்.

கல்வி

தொகு

இவரின் பெற்றோர்களின் மூன்று குழந்தைகளில் மூத்தவரான ஷா, கராச்சியில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். வெல்லஸ்லி கல்லூரியில் உளவியலில் பி.ஏ இளங்களைப் பட்டம் பெற்றார். மேலும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பட்டதாரி பள்ளி கல்விக் கழகத்தில், கல்வி தொழில்நுட்ப பிரிவில் எம்.எட். பட்டம் பெற்றார் [1]

இவர் அயோவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார். அந்தக் கல்லூரியில் படிக்கும் போது இவர் சர்வதேச எழுத்துத் திட்டத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.[2] ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்தாளர்கள் பட்டறையின் முன்னாள் மாணவராகவும் உள்ளார்.[3]

ஊடகம்

தொகு

ஷா நான்கு நாவல்களையும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். இவர் அந்த நூல்களை ஆங்கிலம், இத்தாலியன், பிரஞ்சு, ஸ்பானிஷ், டேனிஷ், சீன, ஜெர்மன் மற்றும் வியட்நாமிய மொழிகளில் வெளியிடப்பட்டார். இவரது சேரி குழந்தை (ஸ்லம் சைல்ட்) நாவல் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதே சமயம் சிந்து பற்றிய ஒரு வரலாற்று புனைகதை நாவல் மற்றும் எ சீசன் ஃபார் மார்ட்டையர்ஸ் 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதனை டெல்ஃபினியம் புக்ஸ் எனும் பதிப்பகம் வெளியிட்டது.[4] அவரது புனைகதை மற்றும் புனைகதை அல்லாத படைப்புகள் கிராண்டா, தி இன்டிபென்டன்ட்,[5] வசாஃபிரி, கிரிட்டிகல் முஸ்லீம், இன்டர்லிட் கியூ, இஸ்தான்புல் ரிவியூ, ஆசிய சா, மற்றும் தி வேர்ல்ட் சேஞ்ச் ஆகிய தொகுப்புகளில் வெளிவந்துள்ளன.

ஷா சர்வதேச டைம்ஸ் [6] பத்திரிகையில் எழுத்தாளராக பனி புரிந்துள்ளார். மேலும் இவர் பாகிஸ்தானின் கராச்சியில் வெளியாகும் செய்தித்தாளான டான் [7] பத்திரிகையின் கட்டுரையாளராகவும் இருந்துள்ளார். தற்போது இவர் விடியலின் (டான்) இதழ் நிறுவனத்தின் புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள் எனும் பிரிவுக்கு கட்டுரை எழுதும் பணியினை மேற்கொண்டு வருகிறார். இவர் அல் ஜசீரா [8], ஹஃபிங்டன் போஸ்ட் [9], கார்டியன் மற்றும் இன்டிபென்டன்ட் [10] ஆகிய பரவலாக அறியப்படும் இதழ்களுக்காக கட்டுரைகளை எழுதியுள்ளார்.

புத்தகங்கள்

தொகு

ஷாவின் முதல் நூலான (அனிமல் மெடிசின் ) விலங்கு மருத்துவம் என்ற சிறுகதைகளின் தொகுதி 2000 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவரது முதல் நாவலான வேர் த ட்ரீம் இன் ப்ளூ 2001 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த நாவலினை அல்ஹம்ரா எனும் பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாவது நாவலான தி 786 சைபர்கேஃப் 2004 ஆம் ஆண்டில் அதே பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், பினாவின் "தி ஆப்டிமிஸ்ட்" என்ற சிறுகதை ஆண்ட் தி வேர்ல்ட் சேஞ்ச் என்ற ஒரு புராணக்கதையில் வெளியிடப்பட்டது. எ லவ் அஃபயர் வித் லாகூர் எனும் கட்டுரை பாப்சி சிந்த்வா என்பவரின் பென்குயின் இந்தியா எனும் சிறுகதையில் வெளியானது. 2007 ஆம் ஆண்டில் அல்ஹம்ரா பதிப்பகம் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ஆசீர்வாதங்கள் (பிளசிங்க்ஸ்) நூலினை வெளியிட்டது. ஷாவின் மூன்றாவது நாவலான ஸ்லம் சைல்ட் (சேரிக் குழந்தை) டிராங்கிபாரால் 2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் இத்தாலிய மொழி பதிப்பு 2009 இல் இத்தாலியில் நியூட்டன் காம்ப்டன் எடிட்டோரியால் லா பாம்பினா சே நோன் பொட்டேவா சாக்னரே என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது, அங்கு இது அதிகம் விற்பனையான நூல்கள் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்தது,[11] மேலும் அங்கு 20,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது. இது ஜூன் 2011 ஆம் ஆண்டில் கிரிஜல்போவால் ஸ்பானிஷ் மொழியில் வெளியிடப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. "On: Bland Food, Binders, and Being Outspoken". Harvard Graduate School of Education. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  2. "Bina Shah", IWP.
  3. "Announcement @ HKBU Library". library.hkbu.edu.hk. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  4. "A Season for Martyrs". Delphiniumbooks.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  5. "Bina Shah" at The Independent.
  6. "Bina Shah" at The New York Times.
  7. "Bina Shah" பரணிடப்பட்டது 21 சூலை 2013 at the வந்தவழி இயந்திரம் at Dawn.
  8. "Bina Shah". Aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  9. "Bina Shah - HuffPost". Huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  10. "Bina Shah". Independent.co.uk. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  11. "In conversation with Bina Shah" பரணிடப்பட்டது 20 திசம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம், Wasafiri,
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினா_ஷா&oldid=2867958" இலிருந்து மீள்விக்கப்பட்டது