பின்ன படிகமாக்கல் (வேதியியல்)
வேதியியலில், பின்ன படிகமாக்கல் என்பது கரைதிறனில் வேறுபடக்கூடிய பொருட்களை கரைதிறன் வேறுபாட்டை அடிப்படையாக வைத்து துாய்மைப்படுத்தும் (அல்லது) பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். இந்த முறை படிகமாதலில் ( படிகங்கள் உருவாதல்) உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி பின்னப்படுத்துகிறது. ஒரு கரைசலில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் கலவைையப் படிகமாக்க அனுமதித்தால், உதாரணமாக, கரைசலின் வெப்பநிலையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்தால், குறைவான கரைதிறன் கொண்ட பொருளின் வீழ்படிவு அதிகமாக காணப்படும். வீழ்படிவாகக் கூடிய கலந்துள்ள பொருட்களின் அளவானது அவற்றின் கரைதிறன் பெருக்கத்தைச் சார்ந்து இருக்கும்.
கரைந்துள்ள பொருட்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கரைதிறன் மதிப்பைக் கொண்டிருந்தால் முழுமையாகப் பொருட்களைப் பிரித்தெடுக்க ஒரு தொடர் அடுக்குச் செயல்முறையைக் கையாள வேண்டியிருக்கும். இந்த முறையானது வேதிப் பொறியிலில் துாய்மையான பொருட்களைப் பெறுவதற்கும், வீணாகும் கழிவுக்கரைசல்களிலிருந்து விற்கத்தக்க பொருட்களை மீட்டெடுப்பதற்கும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- "Small Molecule Crystalization" பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் (PDF) at Illinois Institute of Technology website