பிபின் சந்திரன்
பிபின் சந்திரன் (Bipin Chandran) கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய எழுத்தாளரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் முக்கியமாக மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். டாடி கூல் என்ற இவரது முதல் படம் 2009 இல் வெளியானது.
பிபின் சந்திரன் Bipin Chandran | |
---|---|
பிறப்பு | பொன்குன்னம், கோட்டயம் , கேரளா, இந்தியா |
மற்ற பெயர்கள் | பிந்திரன் |
கல்வி | செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரி, சங்கனாச்சேரி, மகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம் |
பணி | ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009-தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 1983 மற்றும் பாவட |
விருதுகள் | சிறந்த திரைப்படக் கட்டுரைகளுக்கான கேரள மாநில திரைப்பட விருது |
சொந்த வாழ்க்கை
தொகுபிபின் சந்திரன் இந்தியாவின் கேரளாவின் பொன்குன்னத்தில் பிறந்தார்.[1] சங்கனாச்சேரி செயின்ட் பெர்ச்மன்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு, சிறந்த இயக்குநருக்கான கேரள மாநில திரைப்பட விருது வென்ற மார்ட்டின் பிராக்கட்டைச் சந்தித்தார். பிபின் முதுகலை படிப்புக்காக எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பயின்றார்.[1]
தொழில் வாழ்க்கை
தொகுஒரு எழுத்தாளரான பிபின் [2] மம்மூட்டியை ஒரு நடிகராக, நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகளாக குறிக்கும் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பான மம்மூமுட்டி கழ்ச்சாயம் வயநாயும் என்ற புத்தகத்தை எழுதினார்.[3] சமீபத்தில் மலையாள திரைப்படங்களின் வழிபாட்டு உரையாடல்களைப் பற்றி விவாதிக்கும் ஓர்மாயுண்டோ ஈ முகம் என்ற தனது புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.[4] ஐராட்டாச்சங்கு இவரது மற்றொரு புத்தகமாகும்.[5]
ம்திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து கட்டுரைகளை எழுதும் பிபின், கோமாளி மேல்கை நெடுன்ன காலம் மற்றும் மடம்பில்லியில் மனோரோகி ஆகிய இரண்டு கட்டுரைகளுக்காக சிறந்த திரைப்படக் கட்டுரைகளுக்கான 2019 கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Sathyendran, Nita (2016-02-04). "Playing on words". https://www.thehindu.com/features/friday-review/scenarist-bipin-chandran-is-on-a-roll/article8188199.ece.
- ↑ "Bipin Chandran, Author at Indian Express Malayalam". Indian Express Malayalam (in மலையாளம்). Archived from the original on 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- ↑ CHANDRAN, BIPIN (2014-01-01). MAMMOOTTY : KAZHCHAYUM VAYANAYUM. ASIN 8126414464.
- ↑ CHANDRAN, BIPIN (2017-01-01). ORMMAYUNDO EE MUKHAM. ASIN 8126476583.
- ↑ Irattachangu. Archived from the original on 14 October 2021. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
- ↑ "Bipin Chandran full of gratitude for Samakalika Malayalam Vaarika" இம் மூலத்தில் இருந்து 20 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210820144805/https://www.newindianexpress.com/entertainment/malayalam/2020/oct/14/bipin-chandran-full-of-gratitude-for-samakalika-malayalam-vaarika-2209905.html.
வெளி இணைப்புகள்
தொகு- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பிபின் சந்திரன்
- "ഈ പുസ്തകവീട്ടിലേക്കാണ് 2019ലെ ഒരു സംസ്ഥാന ചലച്ചിത്ര പുരസ്കാരമെത്തിയത് - Bipin Chandran - Interview". YouTube (in ஆங்கிலம்). 2 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.
- "All you want to know about BipinChandran". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-20.