பிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயம்
பிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயம் (Bibhutibhushan Wildlife Sanctuary) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ளது.[1] முன்னதாக இது பர்மதான காடு என்ற பெயரில் அறியப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து 100 கிமீ தொலைவிலும் போங்கானில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் இச்சரணாலயம் அமைந்துள்ளது.
பிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயம் Bibhutibhushan Wildlife Sanctuary | |
---|---|
பர்மதன் காடு | |
அமைவிடம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
அருகாமை நகரம் | பங்கான் |
ஆள்கூறுகள் | 23°11′10″N 88°45′44″E / 23.1861775°N 88.7620868°E |
பரப்பளவு | 0.68 சதுர கிலோமீட்டர்கள் (0.26 sq mi) |
நிறுவப்பட்டது | 1980 |
பிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயம் 0.68 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் இச்சாமதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மான்கள், பறவைகள், முயல்கள் மற்றும் பல நீண்டவால் மந்திகள் இங்கு வாழ்கின்றன. [2] ஒரு சிறுவர் பூங்கா, ஒரு சிறிய உயிரியல் பூங்கா மற்றும் வனத்துறையின் சுற்றுலா விடுதி ஆகியவையும் இங்குள்ளன. அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் 92 பேருந்து வழித்தடத்தில் (போங்கான்-எலஞ்சா-தட்டாபுலியா வழி) உள்ள நல்டுகாரியில் உள்ளது.
இருப்பிடம்
தொகுபிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயத்திற்கு பயணிக்க, முதலில் நீங்கள் இரயில் அல்லது பேருந்தில் போங்கானை அடையவேண்டும். பின்னர் 96/சி வழித்தடப் பேருந்தில் சென்று நடபெரியா சந்தையில் இறங்க வேண்டும். இங்கிருந்து பிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயத்தை எளிதாக அடையலாம்.
வரலாறு
தொகுபிபூதிபூசன் வனவிலங்கு சரணாலயம் 1964 ஆம் ஆண்டில் 14 புள்ளிமான்களை காட்டில் விடுவிக்கப்பட்டு தொடங்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், இது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டபோது "பர்மதன்" காடு என்று பெயரிடப்பட்டது. 1995 ஆம் ஆண்டில், சிறந்த இயற்கை ஆர்வலரான பிரபல வங்காள மொழி எழுத்தாளர் பிபூதிபூசன் பந்தோபாத்யாயின் பெயரால் சரணலாயத்தின் தற்போதைய பெயரைப் பெற்றது. [2] [3]
அமைவிடம்
தொகுமேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் இருந்து 100 கிமீ தொலைவிலும் போங்கான் நகரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் இச்சரணாலயம் அமைந்துள்ளது. [4]
வனவிலங்கு
தொகு200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மான்கள், பறவைகள், முயல்கள் மற்றும் பல லாங்கர்கள் எனப்படும் நீளவால் மந்திகள் இங்கு உள்ளன. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Parmadan Wildlife Sanctuary, West Bengal Tourism. Retrieved 30 August 2013. பரணிடப்பட்டது 2 செப்டெம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 2.0 2.1 Sankar Sridhar, "Next weekend you can be at PARMADAN", The Telegraph (India), 30 January 2005. Retrieved 6 November 2018
- ↑ "Parmadan Forest : STOPPING BY THE WOODS", Kolkata on Wheels. Retrieved 30 August 2013. பரணிடப்பட்டது 26 செப்டெம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ মৈত্র, সীমান্ত. "কড়া নিরাপত্তায় পারমাদনে এ বার হল নৌকোবিহারও". www.anandabazar.com. https://www.anandabazar.com/west-bengal/24-parganas/picnic-party-enjoyed-boating-at-parmadan-forest-1.729670.
- ↑ . https://www.sangbadpratidin.in/lifestyle/travel/parmadan-forest-sees-tourist-rush/.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bibhutibhushan Wildlife Sanctuary தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Bibhutibhushan Wildlife Sanctuary