பிம்பச் சிறை (நூல்)

பிம்பச் சிறை எம். ஜி. ராமச்சந்திரன் - திரையிலும் அரசியலிலும் என்பது எம். எஸ். எஸ். பாண்டியன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட The image Trap:M.G.Ramchandran in Films and political என்ற நூலின் தமிழாக்கம் ஆகும். இந்நூலை பூ. கொ. சரவணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆரின் பிம்ப அரசியலைப் பற்றிய ஆய்வாகவும், எப்படி திட்டமிட்ட முறையில் மக்களிடம் வலிந்து பிம்ப அரசியல் திணிக்கப்பட்டது என்பதையும் மிக விரிவாக அலசி ஆராய்கின்றது.

பிம்பச் சிறை (நூல்)
ஆசிரியர்(கள்):மூலம் (ஆங்கிலம்): எம். எஸ். எஸ். பாண்டியன்
தமிழ்: பூ. கொ. சரவணன்
வகை:ஆய்வு நூல்
துறை:வரலாறு
இடம்:சென்னை 17
மொழி:தமிழ்
பக்கங்கள்:248
பதிப்பகர்:பிரக்ஞை
பதிப்பு:முதற் பதிப்பு 2016

மேலும் இந்த நூலில் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையையும், திரையில் தனக்கான பிம்பத்தை திட்டமிட்டு மிகத் தெளிவாக கட்டமைத்தார் என்றும், அவர் கட்டமைத்த பிம்பத்தை எப்படி தமிழக மக்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆரை தங்களில் ஒருவராக, தங்களை மீட்க வந்த மீட்பாராக கருதினார்கள் என்பதை பாண்டியன் ஆய்ந்துள்ளார். எம்.ஜி.ஆரை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ள அடிப்படைக் காரணமாக இருந்தது தமிழ்நாட்டில் ஏற்கெனவே நிலவிவந்த வீர மரபுக் கதைகளை கொண்டாடும் பழக்கம் என்று பாண்டியன் குறிப்பிடுகின்றார்.

தன்னுடைய திரைப்படங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியலை ஆணித்தரமாக வலியுறுத்தும் எம்.ஜி.ஆர் நிஜவாழ்க்கையில் அவ்வாறு இல்லாதவராக இருந்ததையும், தன்னுடைய திரைப்படங்களில் எந்த விதவைப் பெண்களையும், ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களையும் எப்போதுமே திருமணம் செய்துகொண்டதாக காட்சி வைத்ததே கிடையாது என்பதையும், பெரும்பாலான திரைப்படங்களில் அடங்காத பெண்களை அடக்கி அவர்களை தன்னை காதலிக்கும் படி செய்து, அவர்களுக்கு கணவனுக்கு அடங்கிய மனைவியாக எப்படி நடந்துகொள்வது என்ற ஆணாதிக்க கருத்தியலையே அவர் வற்புறுத்தியதையும் பல்வேறு காட்சிகளில் இருந்தும் பாடல்களில் இருந்தும் எடுத்துக்காட்டுகின்றார்.[1]

தமிழாக்கம்

தொகு

இந்த நூல் ஆங்கிலத்தில் வெளிவந்து 24 ஆண்டுகள் ஆன நிலையில் 2016 ஆம் ஆண்டு பூ. கொ. சரவணன் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு, பிரக்ஞை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. செ.கார்கி (23 திசம்பர் 2017). "எம்.ஜி.ஆரின் புனித பிம்பத்தை உடைத்தெறியும் 'பிம்பச் சிறை'". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பிம்பச் சிறை எம்.ஜி.ராமச்சந்திரன் - திரையிலும் அரசியலிலும்". .goodreads.com/book. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிம்பச்_சிறை_(நூல்)&oldid=3056375" இலிருந்து மீள்விக்கப்பட்டது