பியாரேலால் கந்தேல்வால்
இந்திய அரசியல்வாதி
பியாரேலால் கந்தேல்வால் (Pyarelal Khandelwal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1925 ஆம் ஆண்டு 6 ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவில் ஒரு ராசுட்ரிய சுவயம்சேவக் சங்க பிரச்சாரகராகவும், பாரதிய சனதா கட்சி அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார்.
தொழில்
தொகுஇந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [1]
1989 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் திக்விச்சய் சிங்கை தோற்கடித்து, ராச்கர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் திரும்பினார். [2]
இறப்பு
தொகு2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று மாரடைப்பால் கந்தேல்வால் இறந்தார். 84 வயதான இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். [3] [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramaseshan, Radhika (7 October 2009). "Last leg of pracharak era". http://www.telegraphindia.com/1091007/jsp/nation/story_11585585.jsp.
- ↑ "Madhya Pradesh CM Digvijay Singh's proxy war". 5 February 1998.
- ↑ Senior BJP leader Pyarelal Khandelwal passes away பரணிடப்பட்டது 2009-11-30 at the வந்தவழி இயந்திரம் Asian News International/DailyIndia.com. Retrieved on 7 October 2009.
- ↑ "BJP leader Pyarelal Khandelwal dies". Indian Express. 2009-10-07.