பியாலி ஆறு

மேற்கு வங்க ஆறு

பியாலி ஆறு (Piyali River) இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள சுந்தரவனக் காடுகளிலும் அதைச் சுற்றியும் உள்ள ஓர் அலை முகத்துவார ஆறு ஆகும்.

பியாலி ஆறு
Piyali River
பியாலி கரைக்கு அருகில் விளையாடும் உள்ளூர் குழந்தைகள்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
சிறப்புக்கூறுகள்
வெளியேற்றம் 
 ⁃ அமைவுவங்காள விரிகுடா

பியாலி ஆறு பித்யாதாரி ஆற்றில் இருந்து 14 கிலோமீட்டர்கள் (9 mi) பமாங்கட்டா கிராமத்திற்கு கீழே பிரிகிறது. தெற்கு மற்றும் தென்மேற்காக சுமார் 32 கிலோமீட்டர்கள் (20 mi) பாய்ந்து கேனிங்கு நகரத்திற்கு கீழே மட்லா ஆற்றில் சேருகிறது.[1] குல்தாலா காங்கு ஆற்றின் மூலம் பியாலி ஆறு மட்லாவை இணைக்கிறது.[2] பின்னர் இது தாக்குரான் ஆற்றுடன் இணைகிறது.

சுந்தரவனப் பகுதியானது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நீர்வழிகளின் சிக்கலான வலையமைப்பால் பிரிக்கப்படுகிறது. இதில் பெரிய கால்வாய்கள் பெரும்பாலும் 1.6 கிலோமீட்டர்கள் (0.99 mi) அல்லது அதற்கு மேற்பட்ட அகலம் கொண்டவையாக வடக்கு-தெற்கு திசையில் ஓடுகின்றன. கங்கையிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலும் இந்த நீர்வழிகள் இப்போது சிறிதளவு புதிய தண்ணீரை எடுத்துச் செல்கின்றன. இதன் நீர் வெளியேற்றம் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக கிழக்கு நோக்கி ஊக்ளி-பாகீரதி கால்வாய்களில் இருந்து பாய்கிறது. வங்காளப் படுகையின் வீழ்ச்சி மற்றும் மேலோட்டமான மேலோடு படிப்படியாக கிழக்கு நோக்கி சாய்வதால் இது ஏற்படுகிறது.[3] பியாலியில் அதிகளவு வண்டல் மண் படிந்துள்ளது, மேலும் இதன் பெரும்பகுதி குறைந்த பயிரிடப்பட்ட நிலமாக மாற்றப்பட்டு, குறுகிய கால்வாய் மட்டுமே உள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Banerjee, Anuradha (1998). Environment, population, and human settlements of Sundarban Delta By Anuradha Banerjee. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170227397. https://books.google.com/books?id=zf_xv9LRd4cC&q=Thakuran+River&pg=PA72. பார்த்த நாள்: 2009-11-14. 
  2. Mandal, Asim Kumar (2003). The Sundarbans of India: a development analysis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788173871436. https://books.google.com/books?id=jbKGojVTWGcC&q=Matla+river&pg=PA67. பார்த்த நாள்: 2009-11-18. 
  3. "Mangrove Forest in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-27.
  4. Naskar, Kumudranjan (1993). Plant wealth of the lower Ganga Delta: an eco-taxonomical approach, Volume 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170351177. https://books.google.com/books?id=gzIHFbX25t0C&q=Matla+river&pg=PA18. பார்த்த நாள்: 2009-11-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியாலி_ஆறு&oldid=3882316" இலிருந்து மீள்விக்கப்பட்டது